அல்வாய் படுகொலை: 80 இற்கு மேற்பட்ட அப்பாவிப் பொது மக்கள் உடல் சிதறி பலியாகி இன்று 35 ஆண்டுகள் நிறைவு!

0
104

வடமராட்சி “ஒபரேஷன் லிபிரேஷன் “நடவடிக்கையும் அல்வாய் மக்களின் படுகொலையும் இன்றுடன் 35 வருடங்கள் நிறைவு பெறுகின்றது

இராணுவம் வடமராட்சியை மீட்க ஒபேரேஷன் லிபிபேரசன் என்ற பெயரில் படை நடவடிக்கையை மேற்கொண்டனர் 1987-05-29 அதனை தொடர்ந்து வந்த நாள்களில் அல்வாய் பிரதேசம் மரண பூமியாக காட்சி தந்தது , தினம் தினம் அப்பாவி பொது மக்களும் குறிப்பாக இளைஞர்கள் பல பேர் வீதிக்கு வீதி படுகொலை செய்யப்பட்டனர் ,அல்வாய் பிரதேசத்தில் மட்டும் நூற்றுக்கு மேற்பட்ட பொது மக்கள் மூன்று நாள்களில் படுகொலை செய்யப்பட்டனர் , பல குடும்பத்தர்கள் மற்றும் இளைஞர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர் ,29-05-1987 ஆம் ஆண்டு பாதுகாப்பு வலயம் என்று இராணுவத்தினால் அறிவிக்கப்பட்ட ஆலயங்கள், பாடசாலைகள் ,வைத்தியசாலைகள் என்பவற்றில் உயிர் தஞ்சம் கோரி மக்கள் அடைக்காலம் புகுந்தனர் , இதன் ஒரு பகுதி மக்கள் அல்வாய் வேவிலந்தை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இரவு வேளை தமது உயிரை பாதுகாத்துக்கொள்ளும் நோக்கத்துடன் அடைக்காலம் புகுந்தவேளை சரியாக 9-30 மணியளவில் இராணுவம் மேற்கொண்ட ஷெல் தாக்குதலில் 80 மேற்பட்ட அப்பாவி மக்கள் உடல் சிதறி பலியாகினர் , பல பேர் படுகாயம் அடைந்தனர் , அதனை தொடர்ந்து மறுநாள் அல்வாய் பிரதேசம் இராணுவம் சுற்றிவலைக்கப்பட்டு இளைஞர்களை குறிவைத்து தேடுதல் வேட்டையை மேற்கொண்டது , இதன் போது மாலு சந்தியில் மூன்று இளைஞர்கள் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர் ,அல்வாய் பெரியார் பகுதியைச் சேர்ந்த இரு சகோதரர்கள் சிவஞானம் , சிவபாலன் ஆகியோர் இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு மயாக்கை பகுதியில் வைத்து படுகொலை செய்யப்பட்டனர் , இவ்வாறு அல்வாய் பிரதேசம் தினம் படுகொலை பிரதேசமாக காட்சி அளித்தது , இன்றுடன் 35வருடங்கள் நிறைவு பெறுகின்றது ,

29.05.1987 ஆம் ஆண்டு அல்வாய் முத்துமாரி அம்மன் ஆலயத்தில் தஞ்சம் புகுந்த வேளை ஷெல் தாக்குதலில் கொல்லப்படட அல்வாய் மக்கள் அனைவருக்கும் எமது அஞ்சலிகள்

அல்வாய் வேவிலந்தை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் உயிர் தஞ்சம் கோரி அடைக்காலம் புகுந்த அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்ட நினைவு நாள் இன்று


29.05.1987 ஆம் ஆண்டு அல்வாய் முத்துமாரி அம்மன் ஆலயத்தில் தஞ்சம் புகுந்த வேளை இலங்கை இராணுவத்தின் ஷெல் தாக்குதலில் கொல்லப்பட்ட அல்வாய் மக்களின் நினைவு நாள் இன்று , ஆலயங்கள் பாடசாலைகள் வைத்தியசாலைகளில் உயிர் தஞ்சம் கோரி குழந்தைகள் முதியவர்கள் , பெண்கள் என்று பல நூற்றுக்கணக்கான அல்வாய் வாழ் மக்கள் தஞ்சம் அடைந்தனார் , ஒரு பகுதி மக்கள் அல்வாய் வேவிலந்தை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் தஞ்சம் அடைந்தவேளை ஆலயத்தை நோக்கி இராணுவம் ஷெல் தாக்குதலை மேற்கொண்டபோது அப்பாவி மக்கள் உடல் சிதறி பலியாகினார் , அத்துடன் அல்வாய் பிரதேசத்தில் பல கிராமங்களில் இராணுவத்தினால் வீடு வீடாக சென்று குடும்பத்தர்கள் இளைஞர்கள் என்று வெட்டியும் சுட்டும் படுகொலை செய்யப்பட்ட நினைவுநாள் இன்று , பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

க . மார்க்கண்டு
கா .ஆழ்வாப்பிள்ளை
அ .சிவராஜா
மா .நகுலேஸ்வரன்
கி .கிருஷ்ணகுமார்
வி .சாந்தலிங்கம்
தி.ஜெயாதரன்
சி .விஜயலட்ஸ்மி
மா .செல்லம்மா
க .அம்பிகாபதி
வி .அன்னம்மா
ந .யோகேஸ்வரி
த. கோகுலரூபன்
சு.சுபாகரன்
சுதன்
செ.ருக்மன்
த .தர்மேந்திரா
யோ .மைதிலி
ந .குமுதா
…………………………………………………………………..
படுகொலை செய்யப்பட்ட சில பெயர்கள் மட்டுமே இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளது , ஏனையவர்களின் பெயர்கள் தெரித்தவர்கள் பதிவு செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here