தையிட்டி போராட்டத்தில் முன்னணி முக்கிய உறுப்பினர்கள் கைது; காவல்துறை வெறியாட்டம்!

0
147

தையிட்டி விகாரையினை அகற்ற கோரி போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்களான ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி சுகாஷ் மற்றும் தமிழ்மதி ஆகியோர் சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்,

இன்று செவ்வாய்க்கிழமை காலை முதல் தையிட்டி போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு தமிழ்த்தேசிய மக்கள் ‌முன்னணியால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதன் முழுமையான வடிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

22-05-2023
பிரதம ஆசிரியர் / பணிப்பாளர்
பத்திரிகை / தொலைக்காட்சி / வானொலி

ஊடக அறிக்கை
தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றக் கோரியும், தனியார் காணிகளை விடுவிக்கக் கோரியும் தையிட்டிக்கு அழைக்கின்றோம்.

தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றக் கோரியும், இராணுவத்தினதும், சட்டவிரோத திஸ்ஸ விகாரையினதும் ஆக்கிரமிப்பிலுள்ள தனியார் காணிகளை விடுவிக்கக் கோரியும் போராட்டம் தையிட்டிக்கு அனைவரும் அணிதிரளுமாறு அழைக்கின்றோம்.தையிட்டியில் தனியார் காணிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்திற்கு எதிராகவும், தனியாருடைய காணிகளை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் இன்றையதினம் திங்கட்கிழமை பிற்பகல் 3.00 மணி – மாலை 7.00 மணிவரை கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.
இப்போராட்டத்தை தடைசெய்வதற்கான உத்தரவினைக்கோரி நீதிமன்றுக்கு சென்ற பொலீசார் நீதிமன்றில் பொய்களைக் கூறி நீதிமன்றத்தை தவறாக வழிநடாத்தி தடையுத்தரவைப் பெற முயன்றனர். எனினும் மல்லாகம் நீதவான் நீதிமன்றமானது விகாரையில் வழிபாட்டிற்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாதென்றும், விகாரைக்குச் செல்லும் வீதியில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாதென்றும் , வழிபாட்டிற்கு வரும் மக்களுக்கோ, விகாரையில் இடம்பெறும் உச்சவத்திற்கோ இடையூறு ஏற்படுத்தக்கூடாதென்றும், நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.
இவ்வாறு வழங்கப்பட்ட தீர்ப்பினை திரிபுபடுத்தி போராட்டம் எதுவும் நடாத்த முடியாது என்றும் உடனே கலைந்து செல்ல வேண்டும் என்றும் போராட்டக்காரர்களை அச்சுறுத்தி வெளியேற்றுவதற்குப் பொலீசார் முயன்றிருந்தார்கள். எனினும் நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம் போராட்டம் நடாத்துவதற்கான முழு உரிமையும் தமக்கு உண்டென போராட்டக்காரர்கள் உறுதியாகக் கூறியதுடன், வேண்டுமானால் தம்மைக் கைது செய்யுமாறும் கூறி போராட்டத்தைக் கைவிடமறுத்து தொடர்ந்து போராடினார்கள். இன்றைய போராட்டம் மாலை 7.00 மணிவரை தையிட்டி விகாரைக்கு அண்மையில் இடம்பெற்றது. நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்பட்ட வகையில் அமைதியான முறையில் போராட்டம் நாளை காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளது.எனவே பௌத்த பேரினவாத ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக ஒட்டுமொத்த தமிழினமும் ஒன்று சேர்ந்து எதிர்ப்பினை வெளிப்படுத்தினாலே இவ்வாறான ஆக்கிரமிப்புகளை கட்டுப்படுத்தவும் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிக்கவும் ஆத்துமிறி கட்டப்பட்ட விகாரையை அப்புறப்படுத்தவும் முடியும். இப்போராட்டத்தில் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் அனைவரையும் நாளை செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்கு தையிட்டி சனசமூக நிலையத்திற்கு அருகாமையில் ஒன்று கூடி போராட்டத்திற்கு வலுச் சேர்க்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

நன்றி

வலி வடக்கு – ஒருங்கிணைப்பாளர்
தமிழ்த் தேசியப் பேரவை
tncouncil2018@gmail.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here