யாழில் 29 தொழிற்சங்கங்களை ஒன்றிணைத்து தபால் திணைக்கள ஊழியர்களினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் யாழ். தபால் நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.
16 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் இதுபோன்று தபால் திணைக்கள ஊழியர்கள் இன்றைய தினம் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.