பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கி புலிச் சந்தேக நபர்களை விடுதலை செய்து இராணுவத்தினருக்கு எதிராக சாட்சியங்களை பெற்றுக் கொள்ள அரசு முயற்சிப்பதாகவும் விமல் வீரவன்ச எம்.பி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற இலங்கை தொடர்பான ஐ.நா அறிக்கை மற்றும் ஜெனீவா தீர்மானம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே விமல்வீரவன்ச எம்.பி இவ்வாறு தெரிவித்தார்.
அவர் சபையில் தொடர்ந்து உரையாற்றுகையில் யுத்தத்தை வெற்றி கொண்ட எமது படையினர் மீது போர் குற்றம் சுமத்துவதற்காகவே விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் மஹிந்த சமரவீர உட்பட இந்த அரசாங்கம் ஜெனீவா தீர்மானத்தை ஏற்றுக் கொண்டதற்காக அதனை அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ள நாம் தயாராக இல்லை.
ஆதலால் இந்த ஜெனீவா தீர்மானத்தை ஏற்க வேண்டுமா? இல்லையா? என்பது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
ஜனவரி 8 ஆம் திகதியும் ஆகஸ்ட் 17 ஆம் திகதியும் வெற்றி பெற்ற நீங்கள் முடிந்தால் இந்த சர்வஜன வாக்கெடுப்பிலும் வெற்றி பெற்று விசாரணைகளை நடந்துங்கள் என்றார்.