பிரான்சில் பெரும் எண்ணிக்கையானோர் மத்தியில் சிறப்பாக இடம்பெற்ற பட்டமளிப்பு நிகழ்வு!

0
695

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம்-பிரான்சு, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்துடனும் , தமிழ் இணையக் கல்விக்கழகத்துடனும் இணைந்து நடாத்திய இரண்டாவது பட்டமளிப்பு விழா கடந்த  (19/02/2023) ஞாயிற்றுக்கிழமை பெரும் எண்ணிக்கையான மக்கள் மத்தியில் பேர் எழுச்சியாக இடம்பெற்றது.

காலை 11.01 மணிக்கு தமிழ்ச்சோலை பள்ளி நிர்வாகிகள் மண்டப நுழை வாயிலில் இருந்த மங்கள விளக்கினை ஏற்றிவைத்து நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர்.

தொடர்ந்து விருந்தினர்கள் மற்றும் பிரமுகர்கள் தமிழரின் பாரம்பரிய கலையான இன்னிய இசை அணிவகுப்புடன் அழைத்து வரப்பட்டனர்.

அரங்கில் வைக்கப்பட்டிருந்த மங்கள விளக்குகளை .

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சார்பாக துணைப் பொறுப்பாளர் திரு. சசி அவர்கள், முதன்மை விருந்தினர் : முனைவர் பாலசுகுமார் (இலங்கை கிழக்குப் பல்கலைக்கழக, கலை கலாசார துறையின் முன்னாள் துறைத்தலைவர்) அவர்கள், திருவாட்டி இசபல் திலா கூர் (ISABELLE DELACOURT) நகர பிதா செவினி லு தொம் அவர்கள், தமிழ்ச் சோலைத் தலைமைப் பணியகப் பொறுப்பாளர் திரு.சாந்தலிங்கம் நாகயோதீஸ்வரன் அவர்கள், தமிழ்ச் சங்கக் கூட்டமைப்புப் பொறுப்பாளர் திரு.பாலகுமாரன் அவர்கள்,
6கல்வி மேம்பாட்டுப் பேரவை சார்பாக உபதலைவர் திரு. இராகுலன் அவர்கள்,
பட்டப்படிப்பு விரிவுரையாளர்கள் சார்பாக திருவாட்டி திருச்செல்வம் உதயராணி அவர்கள், பட்டகர்கள் சார்பாக திருவாட்டி சந்திரராசா ஜெயக்குமாரி அவர்கள்,
பட்டப்படிப்பு மாணவர்களின் பெற்றோர் சார்பாக : திரு/ திருவாட்டி சுப்ரமணியம் சரஸ்வதி அவர்கள், பட்டப்படிப்பு மாணவர்கள் சார்பாக : திரு புஷ்பராஜா சுபாஷ் அவர்கள் ஏற்றிவைத்தனர்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து சோதியா கலைக்கல்லூரி மாணவர்களால் தமிழ்ச்சோலை கீதம் இசைக்கப்பட்டது.

தமிழ், பிரெஞ்சு மற்றும் ஆங்கிலம் ஆகிய மும் மொழிகளில் வரவேற்புரை இடம்பெற்றது.

வரவேற்புரை:
I. செல்வன் அருள்ராஜா அஜிதன் (தமிழ்)
II. செல்வி செல்வரத்தினம் சாயகி (பிரெஞ்சு)
III. செல்வி சுதாகர் குழலிசை (ஆங்கிலம்)

தொடர்ந்து வரவேற்பு நடனத்தை தமிழியல் பட்டப்படிப்பு மற்றும் புளோமினில் தமிழ்ச்சோலை மாணவியர் சிறப்பாக வழங்கியிருந்தனர்.

மின்விளக்குகள் அணைக்கப்பட்டு முள்ளிவாய்க்காலில் இருந்து கொண்டு வரப்பட்ட லாந்தர் விளக்கு ஏற்றப்பட்டு மேடையில் ஏந்தப்பட்டு முள்ளிவாய்க்கால் வலிகளை கவிதை ஒலி வடிவில் ஒலிக்கவிடப்பட்ட போது மண்டபமே அமைதியோடு உற்றுநோக்கியமை அவதானிக்க முடிந்தது.

தொடர்ந்து முரசு அறையப்பட்டு மரபு ரீதியாக பட்டமளிப்பு விழா தொடங்கப்படுவது பற்றி அறிவிக்கப்பட்டது.

முரசைப் பற்றி செல்வி பத்மநாதன் றஜிதா அவர்கள் அறிவித்தார்.

தொடர்ந்து பீடாதிபதி திரு.சிவஞானம் தனராஜா அவர்களின் உரை இடம்பெற்றது.

பட்டகர்களின் விவரணக் காணொளி காட்சிப்படுத்தப்பட்டு,

அனைவரின் கரகொலிக்கு மத்தியில் பட்டமளிப்பு சிறப்பாக இடம்பெற்றது.

முனைவர் பாலசுகுமார் அவர்கள் பட்டமளித்தலை ஆரம்பித்து வைத்தார்.

தொடர்ந்து பட்டகர்களின் உறுதி மொழி எடுத்தல் இடம்பெற்றது.

தொடர்ந்து முதன்மை விருந்தினர் முனைவர் பாலசுகுமார்
(இலங்கை கிழக்குப் பல்கலைக்கழக, கலை கலாசார துறையின் முன்னாள் துறைத் தலைவர்) அவர்களின் சிறப்புரை இடம்பெற்றது.

தமிழ் இணையக் கல்விக்கழக இயக்குநர் வழங்கிய வாழ்த்துச் செய்தியை பட்டகர் கிருஷ்னராஜா ஜெயராதா அவர்கள் வாசித்தளித்தார்.

இந்த இரண்டாவது பட்டமளிப்பு விழாவில் 32 பட்டகர்கள் பட்டம்பெற்றனர். இவர்களுடன் ஏற்கனவே பட்டம்பெற்ற பட்டகர்களும் இந்நிகழ்வில் சிறப்பாக மதிப்பளிக்கப்பட்டனர். மேலும்,பட்டயம் ,மேற்பட்டயம், மேற்சான்றிதழ் நிலை  மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
நிகழ்வின் இரண்டாவது அமர்வாக 2020, 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் வளர்தமிழ் 12 இனை நிறைவு செய்த 450 இற்கும் மேற்பட்ட மாணவர்களும் சான்றிதழ் வழங்கப்பட்டு  மதிப்பளிக்கப்பட்டனர்.

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தனது வெள்ளிவிழாவை காணும் இவ்வாண்டில் இரண்டாவது இளங்கலைத் தமிழியல் பட்டமளிப்பு விழாவுடன் வளர்தமிழ் 12 நிறைவு செய்த மாணவர்கள் மதிப்பளிக்கப்படுவது வரலாற்றில் சிறப்பிடம் பெறுகிறது.

முள்ளிவாய்க்காலை நினைவு படுத்தும் கஞ்சியை சிரட்டையில் வழங்கியிருந்தமை அனைவரையும் சிந்திக்க வைத்திருந்தது.

வளர் தமிழ் 12 இனை நிறைவு செய்து இன்று மதிப்பளிப்பு செய்யப்பட்ட அனைத்து மாணவர்களும் பிரெஞ்சு தேசத்தில் தொழில் துறையில் உயர் பதவிகளை வகித்து வருகின்றமை பெருமைக்குரியது.

பிரித்தானியா, யேர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்தும் மாணவர்கள் கலந்துகொண்டு சான்றிதழ்களைப் பெற்றுச் சிறப்பித்திருந்தமை நிகழ்வை மேலும் மெருகூட்டியது.

பண்டைத் தமிழரின்இயற்கையோடு இணைந்த வாழ்வியலைக் குறிக்கும் முகமாக இந்த இரண்டாவது பட்டமளிப்பு விழா இயற்கைசார் நிகழ்வுகளோடு இடம்பெற்றமை குறிப்பிட்டுக் கூறக்கூடிய விளத்தமாகும்.

பட்டகர் விநாசித்தம்பி மோகனதாஸ் (தமிழ்)
முனைவர் இந்திரஜித் சுவஸ்திகா (பிரெஞ்சு) ஆகியோர் தமது அறிவிப்பினூடாக நிகழ்வினை சிறப்பாகக் கொண்டுசென்று குறித்த நேரத்தில் நிறைவு செய்திருந்தமை பாராட்டத்தக்கது.

இந்நிகழ்வின் பெரும் பகுதியை இளையோர்களே முன்னின்று நடாத்தியதைக் காண முடிந்த அதேவேளை, இனிவரும் காலங்களில் இளையோர்களே இவ்வாறான நிகழ்வுகளை முன்னின்று கொண்டு செல்வர் என்பது ஐயமின்றி எம் கண்முன்னே உணர்த்தி நிற்கின்றது.

நன்றியுரையினை பட்டகர் சிவகணேசன் செந்தூரி அவர்கள் வழங்கியிருந்தார்.

நிறைவாக நம்புங்கள்‌ தமிழீழம் நாளைபிறக்கும் பாடலுடனும் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்‌ என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.

இந்த நாள் இனிய பொழுதாக அமைந்ததாக பெற்றோரின் சார்பில் ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி உணர்வோடு தெரிவிக்கப்பட்டமை நிகழ்வின் பெறுமதியை பறைசாற்றியிருந்தது.

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – ஊடகப்பிரிவு)

(படங்கள்: யூட், வினுயன்,பகிர்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here