தஞ்சையில் தமிழீழ விடுதலைப்புலி போசன் நினைவிடம் இடித்தழிப்பு; மு. களஞ்சியம் கண்டனம்!

0
193

தமிழக அரசு இதற்கு உடந்தையா!
தமிழர் நலப்பேரியக்கத்தலைவர், இயக்குநர் மு. களஞ்சியம் கண்டன அறிக்கை!

தஞ்சாவூர் வடக்குவாசல் இடுகாட்டில் தமிழீழ விடுதலைப் போராளி லெப்டினன்ட் போசன் கல்லறை உள்ளது. அது இன்று (24.1.2023) தஞ்சை மாநகராட்சியினரால் இடிக்கப்பட்டுள்ளது.


2018 இல் தஞ்சாவூர் வடக்கு வாசல் என்ற இடத்தில் ஒரு தமிழீழ விடுதலை புலியின் வித்துடலும், நினைவு கல்வெட்டும் இருக்கிறது என்பதை உலக அறியச்செய்யப்பட்டது. இந்த தகவல் பலரை ஆச்சிரியப்படுத்தியது. பராமரிப்பின்றி கிடந்த அந்த நினைவிடத்தை மறுசீரமைப்பு செய்து 27.11.2018 அன்று மாவீர நாள் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டது தமிழக அரசின் தடையை மீறி இந்த நிகழ்வை செய்து அன்று தமிழர் நலப்பேரியக்கத்தலைவர், இயக்குநர் மு. களஞ்சியம கைது செய்யப்படடிருந்தார்.

”தமிழீழ விடுதலைப் புலி போசன் நினைவு கல்வெட்டு. மறைவு-27-06-1989 திறப்பாளர் : தமிழினக் காவலர் மானமிகு கி.வீரமணி எம்.ஏ.பி.எல் (திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்) நகர திராவிடர் கழகம்.தஞ்சாவூர்.” என்று எழுதப்பட்டிருந்த கல்வெட்டு இன்று சுக்குநூறாக உடைத்து தகர்த்துள்ளது தமிழக அரசு இதற்கு துணைபோய் உள்ளதா என்றே பலர் ஆதங்கப்படுகின்றனர்.
மாவீரர் போசன் என்பவர் யார்? இந்திய அமைதிப்படையின் அட்டூழியங்கள் அரங்கேறும் காலகட்டத்தின் தமது அறச்சீற்றத்தை வெளிக் கொணர்ந்து இந்திய சிங்கள இராணுவத்தினரை நேர்நின்று மோதியவர். அந்த காலகட்டத்தில்தான் தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் தஞ்சமைடைந்து போரில் காயமுற்றிருந்த அவர் தொடர் மருத்துவச் சிகிச்சைக்காக தஞ்சாவூரில் தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்திய உளவுத்துறையில் மோப்பம் பிடித்து போசனை இருக்குமிடமறிந்து தமிழக காவல் துறையின் துணையோடு அவரை கைது செய்ய ஏற்பாடுகள் நடந்தேறியுள்ளது. இதை அறிந்த லெப்டினன்ட் போசன் அவர்கள் எதிரிகளின் கையில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக தன் கழுத்திலேயே அணிந்திருந்த சாவுச் குப்பியை (சயனைட் குப்பி) கடித்து சாவைத் தழுவியுள்ளார்.
தஞ்சை வடக்குவாசல் இடுகாட்டில் பலநூறு கல்லறைகளில் இருக்கின்றன. குறிப்பாக திராவிட இயக்கத்தின் முதன்மை தலைவர்களின் ஒருவர் பட்டுக்கோட்டை அழகிரி அவரது கல்லறையும் வடக்கு வாசலில் தான் உள்ளது. ஆனால் திட்டமிட்டே போசன் கல்லறையை மட்டும் இடித்துத்தள்ளுவதற்கான அவசியம் என்ன என்று தமிழின உணர்வாளர்கள் கொதித்துப்போயு;யுள்ளனர்.

கிட்டத்த 34 ஆண்டுக்கு முன் திராவிட கழகத்தினரால் அக்கல்லறை அங்கே எழுப்பப்பட்டுள்ளது. இத்தனை ஆண்டு காலம் இப்படி ஒரு கல்லறை இருக்குமென்று யாவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி ஒரு கல்லறை இருந்தும் அதை யாரும் தொடர்ந்து போற்றி பாதுகாக்க வில்லை ஆனால் அதை கண்டறிந்து புனிதப்படுத்திய போதும், இந்த உன்னத தியாகம் இன்று யாவருக்கும் தெரிந்தவுடன் அதை தரைமாட்டமாக்கியுள்ளது. தனக்கெனதொரு விடுதலையை வேண்டிநிற்கும் தமிழினம் இதனை ஏற்றுக்கொள்ளாது. உடனடியாக இதனை இடித்தவர்களை கைது செய்ய வேண்டும். இதன் பின்புலம் அறிய வேண்டும் அவர்களில் உரிய நடிவடிக்கை எடுக்க வேண்டும். உண்மையாக தமிழனத்தில் பற்றுக் கொண்டவர்களானால் இடிக்கப்பட்ட கல்லறையை அதே இடத்தில் தமிழக அரசு நிறுவவேண்டும். இந்த நினைவிடத்தை 34 ஆண்டுகளுக்கு முன் திறந்து வைத்த திராவிடக் கழகத்தலைவர் கி. வீரமணி அய்யா அவர்கள் உடனடியாக தமிழக முதல்வர் அவர்களிடம் முறையிட்டுனன்ற0 புதிய கல்லறையை அதே இடத்தில் எழுப்பன்ற ஏற்பாடு செய்யவேண்டும் என்று தமிழின உணர்வாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இல்லையெனில் தலைமையில் க்ஷ1 அதே இடத்தில் போசன் நினைவிடம் நிறுவ பெரும் மக்கள் திரள் போராட்டம் வழியாக அதை தமிழர் நலப்பேரியக்கத்தலைவர், இயக்குநர் மு. களஞ்சியம் செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here