பிரான்சு ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு 08-01-2023!

0
202
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தமிழர் விளையாட்டுத்துறையும், அதன் ஈழத்தமிழர் உதைபந்தாட்டச்சம்மேளனமத்தின் 2023 ஆண்டிற்கான உதைபந்தாட்ட சம்மேள உறுப்பினர் நியமனமும், கழகங்களுக்கான பொதுக்கூட்டமும் 08.01.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு நந்தியார் பிரதேசத்தில் நடைபெற்றது.
அகவணக்கத்துடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இக்கூட்டத்தில் ஒவ்வொரு விளையாட்டுக்கழகங்களின் சார்பில் 2 உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர். சம்மேளனத்தலைவராக இருந்த திரு. சுரேசு அவர்கள் கடந்த ஆண்டில் விளையாட்டுத்துறையின் உடாக செய்யப்பட் செயற்பாடுகள், உதைபந்தாட்டத்தால் கழகங்களால் பெற்றுக் கொடுக்கப்பட்ட வெற்றிகள் ,புகழ்பற்றியும் அத்துடன் எதிர் கொண்ட நன்மைகள், தீமைகள், பற்றியும் கழகங்கங்கள் சம்மேளனத்திற்கு கொடுத்த ஒத்துழைப்புகள் பற்றியும் இனிவரப்போகும் புதிய நிர்வாகத்திற்கு அனைத்து கழகங்களும் தொடர்ந்து பங்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து செயலாளரால் சென்ற ஆண்டு அறிக்கையும், பொருளாளர் அறிக்கையும் வாசிக்கப்பட்டது. கழகங்கங்களால் தெரிவிக்கப்பட்ட சில விடயங்கள் திருத்திக்கொள்ளப்பட்டு ஏகமனதாக அறிக்கைகள் ஏற்றுக்கொள்ப்பட்டன. அதன் பின்னர் தாய்க்கட்டமைப்பான தமிழர் ஒருங்கிணைப்பினால் 2022 ஆம் ஆண்டு நிர்வாகம் கலைக்கப்பட்டது. சிறிது நேர இடைவேளையின் பின்னர் மீண்டும் அனைத்து விளையாட்டு கழக வீரர்களும் ஒன்றுகூடினர். நிர்வாகத்தினை தலைமைதாங்கிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, விளையாட்டுத்துறை சார்பாக கிளைப் பொறுப்பாளர், மற்றும் நிர்வாகப் பொறுப்பாளர் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.


கடந்த காலங்களில் விளையாட்டுத்துறையின் சம்மேளனத்தினுடாக விளையாட்டுக்கழகங்கள் பெற்றுக்கொடுத்த வெற்றிகள், பெயரும் புகழ் பற்றியும் எமது விளையாட்டு வீரர்கள் இன்று உதைபந்தாட்டத்தில் சிறந்து வளர்வதும், விளையாட்டுத்துறையினருடன் அனுசரணையுடன் இளையவர்கள் திறமைவாய்ந்தவர்கள் சர்வதேசரீதியில் வீரர்களை கொண்டு முயற்சிகளுக்கு பாராட்டுதல்களும் சொல்லப்பட்டன.
மேலும் கடந்த காலங்களில் சம்மேளனத்தின் பட்டறிவின் பயனாகவும், சம்மேளனயாப்பின் சட்டதிட்டங்களுக்கமையவும், இந்த ஆண்டு சம்மேனத்தை இன்னும் பலமிக்கதாக ஆக்க வேண்டும் என்ற ரீதியிலும் எமது வருங்காலத் தலைமுறையை சகல துறைகளிலும் வளர்த்தெடுக்க வேண்டிய பணி பெரியவர்கள் எல்லோருக்கும் உண்டு என்ற வகையில் பல்வேறு தரப்பிலிருந்தும் ஒர்செயற்குழு கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டது. நீண்ட காலமாக விளையாட்டுத்துறையில் அனுபவம் கொண்டவர்களின் கருத்துக்களும், ஆலோசனைகளும் உள்வாங்கப்பட்டது.
அத்துடன் நீண்டகாலமாக விளையாட்டுத்துறையின் உடாக பெரும் பலமாக இருந்தவர்கள், இருந்து வருபவர்கள் மூத்தவர்கள் நினைவுகொள்ளப்பட்டு அவர்களுக்கான பாராட்டுதல்களும் இந்நேரத்தில் கூறப்பட்டது. விளையாட்டுக்கழகம் சார்பாகவும், ஏனைய துறைகளிலும் இருந்து வந்திருந்த அனைவரும் எதிர்காலத்தில் சிறப்பா விளையாட்டுத்துறையினை  கொண்டு செல்ல தமது பூரண ஒத்துழைப்பையும் நல்குவதாகவும் உறுதியளித்திருந்தனர். தொடர்ந்து விளையாட்டுத்துறை துணைப் பொறுப்பாளரினால் ஈழத் தமிழர் உதைபந்தாட்டச்சம்மேளன நிர்வாக உறுப்பினர்கள் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விபரங்கள் யாவும் பின்வருமாறு:
பிரான்சு ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக உறுப்பினர்கள்:
1.தலைவர்; : திரு. சுரேசு அவர்கள்.
2.உபதலைவர் : திரு. நோயிஸ் அவர்கள்.
3.செயலாளர் : திரு.குட்டி அவர்கள்.
4.உபசெயலாளர் : திரு. கீர்த்தி அவர்கள்.
5.பொருளாளர் : திரு. சுரேசு அவர்கள்.
6.பயிற்சியாளராக : திரு.சுதா அவர்கள்.
7.உப பயிற்சியாளராக : திரு.நிசான் அவர்கள்.
8.கணக்காய்வாளராக : திரு.அன்புச்செல்வன் அவர்கள்.
• போட்டிக்குழு உறுப்பினர்களாக:
1.செல்வன்.கோபி அவர்கள்  
2.திரு.குணம், அவர்கள்
3.திரு.டான்சன், அவர்கள்
4.திரு.குகன், அவர்கள்
5.திரு.கியுமன், அவர்கள்
6.திரு. பிரகாஸ், அவர்கள்
7.திரு.முகுந்தன்,அவர்கள்
8.திரு.கிரேசியன், அவர்கள்
9.திரு. கலையழகன் அவர்கள்
• அனைத்துலக ரீதியாக விளையாட்டுத்துறை இனைப்பாளராக செல்வன். திபு அவர்கள்.
• நடுவர் சங்கத்தின்  தலைவர் திரு. ஆனந்தராசா அவர்கள்

• சம்மேளன உறுப்பினர்களாக :
1.செல்வன்.தோமா, அவர்கள்
2.திரு.ரமணன், அவர்கள்
3.திரு.வம்ஸ்,அவர்கள்
4.திரு.யேறோம் அவர்கள்
விளையாட்டுதுறை செயற்குழுவில் உள்ளவர்கள்.
1.திரு. பீலிக் அவர்கள்;,
2.திரு.கிருபா அவர்கள்,
3.திரு.யோகச்சந்திரன்அவர்கள்.
4.திரு.றமேஸ்அவர்கள்
5.திரு.ராசலிங்கம் அவர்கள்,
6.திரு. அன்பு அவர்கள்,
7.திரு. யெறோம் அவர்கள்
தமிழர் விளையாட்டுத்துறை ஈழத்தமிழர் உதைபந்தாட்ட சம்மேளன பிரான்சு நிர்வாக உறுப்பினர் தெரிவும் நியமனமும் இனிதே அனைத்து விளையாட்டுக்கழகங்களின் ஒத்துழைப்பும் வாழ்த்துகளோடும் நிறைவு பெற்றது. இனிவரும் நாட்களில் தமிழர் விளையாட்டுத்துறையின் கீழ் துடுப்பெடுத்தாட்டச் சம்மேளனம், கரப்பந்தாட்ட சம்மேளன உறுப்பினர்கள் நியமனமும் நடைபெற்வுள்ளன என்பதை விளையாட்டுத்துறையினர் தெரிவித்திருந்தனர்.

நன்றி ஊடகப்பிரிவு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here