பிரான்சில் 16.12.2011 அன்று சாவடைந்த எல்லோராலும் மாமா என்று அன்போடு அழைக்கப்படும் ஈழமுரசு இதழை வெளிக்கொண்டுவந்த பூபாளம் நிறுவனம் மற்றும் ஊடக இல்லத்தின் தலைவர் நாட்டுப்பற்றாளர் பிரான்சிஸ் அந்தோனி சந்தியோகு அவர்களின் 11வது ஆண்டு நினைவு நிகழ்வு கடந்த 16.12.2022 வெள்ளிக்கிழமை அன்று Lemeil Brevannes நகரில் அமைந்துள்ள அவரது கல்லறையில் இடம்பெற்றன.
ஈகைச் சுடரை பிரான்சிஸ் அந்தோனி சந்தியோகு அவர்களின் துணைவியார் அவர்கள் ஏற்றிவைத்து.மலர்வணக்கம் செலுத்தினார். அகவணக்கத்தைத் தொடர்ந்து, வருகைதந்திருந்தவர்களால் சுடரேற்றி, மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.



