சங்கிலிய மன்னன் சிலை வாளில் குளிர்பான நிறுவனம் ஒன்றில் விளம்பரப் பதாகை; பொதுமக்கள் விசனம்!

0
400

நல்லூர் முத்திரை சந்தியில் அமைக்கப்பட்டுள்ள சங்கிலிய மன்னன் சிலை வாளில் குளிர்பான நிறுவனம் ஒன்றில் விளம்பரப் பதாகை கட்டப்பட்டுள்ளமை பொதுமக்கள் மத்தியில் பெரும் விசனத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் மக்களின் வீரத்தின் பறைசாற்றும் வகையில் கம்பீரமாக வாளேந்திய நிலையில் சங்கிலிய மன்னனின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. சங்கிலிய மன்னன் ஏந்தியுள்ள வாளிலேயே குறித்த நிறுவன விளம்பரப் பதாகை பறக்க விடப்பட்டுள்ளது.

தமிழ் மன்னனின் வீரத்தையும் தமிழ் மக்களையும் கொச்சைப்படுத்தும் வகையில் நடந்து கொண்டுள்ள குறித்த குளிர்பான நிறுவனத்தின் செயற்பாடு வருந்தத்தக்கது என்றும் கண்டிக்க வேண்டியது என்றும் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
jpeg

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here