யாழ். மற்றும் திருமலையில் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முற்பட்ட 49 பேர் கைது!

0
85

சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவுக்குச் செல்ல முற்பட்ட 45 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

திருகோணமலை – குச்சவெளி கடற்பரப்பில் வைத்து இவர்கள் இன்று (புதன்கிழமை) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 11 ஆண்களும் 9 பெண்களும் உள்ளடங்குவதனுடன், 20 வயதுக்கு கீழ்பட்ட 25 பேர் அடங்குவதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

இதேவேளை,

யாழ் தொண்டமனாறு பகுதியில் இருந்து சட்டத்துக்குப் புறம்பாக படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டில் நான்கு பேர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு யாழ் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை ஒரு மணியளவில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியாவைச் சேர்ந்த இருவரும் திருகோணமலையைச் சேர்ந்த இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

யாழ் தொண்டமனாறு இராணுவச் சோதனைச் சாவடிக்கு அண்மையாக அதிகாலையில் நடமாடிய நால்வரையும் இராணுவத்தினர் விசாரணை நடத்திய போதே அவர்கள் படகுமூலம் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டமை தெரியவந்தது.

படகு ஒன்றுக்கு தலா 3 லட்சம் ரூபாய் வீதம் பணம் செலுத்தியதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here