
கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும், நாட்டில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கொழும்பு காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் “கோட்டா கோ கம” போராட்டம் 57ஆவது நாளாகவும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள தரப்பினர் அரசாங்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலான கோஷங்களை எழுப்பியவாறும் பாடல்களை பாடியவாறும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
போராட்டக்காரர்களுக்கு வலுச்சேர்க்கும் வகையில் அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட தரப்பினர் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.