மே 18 தமிழின அழிப்பின் 13 ஆவது ஆண்டு நினைவாக பிரான்சு பாரிஸ் லாச்சப்பலில் பிரசுரங்கள்!

0
354

தமிழினப்படுகொலை உச்சநாள் மே 18 இன் 13 ஆவது ஆண்டின் நினைவாக பிரான்சு மண்ணில் நடைபெறவுள்ள நீதிக்கான பேரணியும், நினைவேந்தல் நிகழ்வும் எதிர்வரும் 18 புதன்கிழமை மதியம் 2.00 மணிக்கு றீபப்ளிக் என்னும் இடத்தில் புறப்பட்டு பஸ்தில் என்ற இடத்தில் நிறைவு பெற்று நினைவேந்தல், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் உரைகள் நிகழ்வுகளோடு நடைபெறவுள்ளது.


அந்த ஏற்பாடுகள் சம்பந்தமான துண்டுபிரசுரங்கள் பாரிஸ் லாச்சப்பல் பகுதியில் தமிழர் வர்த்தக நிலையங்களிலும், பாரிசின் புறநகர் பகுதி வர்த்தக நிலையங்களிலும் ஒட்டப்பட்டுள்ளன.

தமிழ்மக்களோடு பிரெஞ்சுமக்களும், ஏனைய நாட்டு மக்களும் அவற்றை விசாரித்து தெரிந்து கொண்டு ஆதரவு தருவதாகவும் கூறிச்சென்றனர் என்பதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here