
தமிழினப்படுகொலையின் உச்சநாளாகக்கருதப்படும் மே 18 கவனயீர்ப்புப் போராட்டம் இக்காலப்பகுதியில் பிரான்சின் பல பிரதேசங்களில் நடைபெற்று வருகின்றது. நேற்று 11/5/2022 புதன்கிழமை பாரிசின் புறநகர் பகுதியான திறான்சி என்னும் இடத்தில் மாநகரசபைக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் திறான்சி பிராங்கோ தமிழ்சங்கத்தினால் நடாத்தப்பட்டது.












நிகழ்வில் 93 பிரதேச பாராளுமன்ற உறுப்பினர் அவர்களும் துணைவியார் மாநகர முதல்வரும் கலந்து கொண்டிருந்தனர்.
மாவீரர் குடும்பத்தினர் சங்க உறுப்பினர்கள் நகரசபை ஆலோசகர் திரு. அலன் ஆனந்தன், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்கள், மாவீரர் பணிமனை செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.
இவர்களுடன் மொறிசியசு நாட்டில் தமிழினப்படுகொலை நினைவுச்சின்னம் நிறுவுவதற்குக் காரணமாக இருந்த மொறிசியசு நாட்டுத் தமிழரும் கலந்து கொண்டிருந்தார்.