டென்மார்க்கில் உணர்வடைந்த நாட்டுப்பற்றாளர் நினைவு நாள் – 2022

0
359

பாரத தேசத்திடம் இரண்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 19.03.1988 தொடக்கம் 19.04.1988 வரை அகிம்சை வழியில் சாகும் வரை உண்ணா நோன்பிருந்து சாவைத் தழுவிக்கொண்ட தியாகச் சுடர் அன்னை  பூபதியம்மாளின் அவர்களின் 34 ஆவது ஆண்டு வணக்க நிகழ்வும், நாட்டுப்பற்றாளர்கள் அனைவரினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வும் கடந்த (30.04.2022) சனிக்கிழமை டென்மார்க் ஈகாஸ்ட் நகரில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.

தியாகச் சுடர் அன்னைபூபதி அவர்களது திருவுருவப்படத்திற்கு ஈகச்சுடர் ஏற்றி, மலர்வணக்கம் செலுத்தியதை அடுத்து நாட்டுப்பற்றாளர்களின் திருவுருவப்படங்களிற்கு அவர்களது உரித்துடையவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் ஈகச்சுடர்களேற்றி மலர்வணக்கம் செலுத்தினார்கள். அதனைத்தொடர்ந்து மக்கள் சுடர், மலர்வணக்கம் செலுத்தி அகவணக்கம் இடம் பெற்றது.

நிறைவாக ”தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற எமது தாரகமந்திரத்தை அனைவராலும் உரக்க கூறி இந்நிகழ்வு நிறைவுபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here