சர்வதேச எதிர்ப்புக்கு மத்தியில் தூக்கிலிடப்பட்டார் நாகேந்திரன்!

0
200


மன்றில் “அம்மா” என்ற அழுகுரல்!

சிங்கப்பூரில் போதைப் பொருள் கடத்தல்
வழக்கில் மரண தண்டனை விதிக்கப்
பட்டிருந்த மலேசியத் தமிழ் இளைஞர்
தூக்கிலிடப்பட்டார் என்பதை உறவினர்
கள் உறுதிப்படுத்தி உள்ளனர்.

நாகேந்திரன் தர்மலிங்கம் என்ற அந்த நபர் 2009ஆம் ஆண்டு மலேசியாவில் இருந்து43 கிராம் ஹெரோயின்போதைப் பொருளைத் தனது தொடை இடுக்கில் மறைத்து எடுத்து வந்த வேளை சிங்கப்
பூர் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்
டிருந்தார்.உலகிலேயே மிக இறுக்கமான
சிங்கப்பூரின் போதைப் பொருள் தடுப்புச்
சட்டங்கள் 15 கிராமுக்கு மேற்பட்ட அளவி
லான ஹெரோயின் கடத்தலுக்கு மரண
தண்டனையை வழங்க அதிகாரமளிக்கி
றது.

நாகேந்திரன் மீதான குற்ற விசாரணை
கள் கடந்த ஒரு தசாப்த காலமாக நீடித்
தன. 34 வயதான அவர் வற்புறுத்தலின் பேரிலேயே ஹெரோயின் கடத்தலைச்
செய்ததாக முதலிலும் பின்னர் பணத்
தேவைக்காகவே அதனைச் செய்தார் என்
றும் முரண்பாடான வாக்குமூலங்களை
வழங்கியிருந்தார். அவரது முதல் கூற்று
குற்றத்தை மறைப்பதற்காகச் சோடிக்கப்
பட்ட ஒன்று என்றும் தான் என்ன செய்கி
றார் என்பதைத் தெரிந்து கொண்டே குற்றம் புரிந்துள்ளார் என்றும் கண்டறி
ந்த நீதிமன்றம் அவருக்கு மரண தண்
டனைத் தீர்ப்பளித்திருந்தது.

இந்த நிலையில் அவரைப் பரிசோதித்த
மருத்துவ நிபுணர் ஒருவர், நாகேந்திரன்
IQ 69 எனப்படுகின்ற’புத்திக் கூர்மை அல்
லது அறிவு சார்ந்த குறைபாடுடையவர்’
என்பதைக் கண்டறிந்தார். அதனால்
அவரது வழக்கு விவகாரம் சர்வதேச மட்
டத்தில் பெரும் சர்ச்சைக்குரியதாக மாறி
யிருந்தது. அறிவுசார் குறைபாடு( intelle
ctual disability) கொண்ட ஒருவருக்கு மரண தண்டனை விதிப்பதற்கு எதிர்ப்பு
தெரிவித்துப் போராட்டங்கள் வெடித்தன.
ஐரோப்பிய ஒன்றியமும் மரண தண்ட
னைக்கு எதிரான உலக இயக்கங்களும்
நாகேந்திரனைத் தூக்கிலிட வேண்டாம்
என்று சிங்கப்பூர் அரசிடம் கோரிக்கை
விடுத்து வந்தன. ஆனால் தான் செய்தது சரியா தவறா என்பதைச் சரியாக உணர்
ந்து கொள்ளக்கூடிய புத்தி உணர்வு நிலையிலேயே அவர் இருந்தார்” – என்று சிங்கப்பூர் அரசு அடித்துக் கூறியிருந்தது.

மரண தண்டனையை ஆயுள் தண்டனை
யாக்குமாறு செய்யப்பட்ட பல மேன்முறை
யீடுகள் நிராகரிக்கப்பட்டன. கடைசியாக
நாகேந்திரனின் தாயார் கருணை காட்
டக் கோரிச் செய்த முறையீடும் நேற்று
நிராகரிக்கப்பட்டதை அடுத்தே சட்ட விதி
முறைகளின் படி அவர் தூக்கிலிடப்பட்
டார். சிங்கப்பூரின் சாங்கி சிறையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. பின்னர் அவரது உடலை மலேசியாவுக்கு அனுப்பிவைக்க ஏற்பாடாகியுள்ளது

நீதிமன்றில் அவரது குடும்பத்தினர் அவரது கைகளை பற்றி இறுதி விடை கொடுத்த சமயத்தில் நாகேந்திரன் “அம்மா” என்று கதறினார் என “ரொய்ட்டர்” செய்தி ஒன்று தெரிவிக்கிறது.

      -பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
                                             27-04-2022

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here