பிரான்ஸ் வரும் உக்ரைனியருக்கு தொடருந்து போக்குவரத்துகள் இலவசம்!

0
80

இதுவரை சுமார் 100 பேர் வருகை

உக்ரைனில் இருந்துவருகின்ற அகதி
கள் அதிவிரைவு மற்றும் இன்ரசிற்றி
(TGV et Intercités) ரயில்களில் கட்டண
மின்றி இலவசமாகப் பயணிப்பதற்கு அனுமதிக்கப்படுவர் என்று பிரான்ஸின்
SNCF போக்குவரத்து நிறுவனம் அறிவித்
திருக்கிறது.

டென்மார்க், ஜெர்மனி போன்ற ஏனைய
சில ஐரோப்பிய நாடுகளும் அகதிகளுக்
கான போக்குவரத்துக்களை இலவசமாக்
கியிருக்கின்றன.

இடம்பெயர்ந்து வருகின்ற உக்ரைன்
மக்களை நாட்டினுள் வரவேற்பதற்கு
இலகுவான நடைமுறைகள் செய்யப்
பட்டுள்ளன என்று உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டாமனா தெரிவித்திருக்கிறார்.

பிரான்ஸின் எல்லைக்குள் இதுவரை
நூற்றுக்கும் சற்றுக் குறைந்த எண்ணிக்
கையான உக்ரைன் அகதிகள் வருகை
தந்துள்ளனர். விமான நிலையங்கள், பிரதான நெடுஞ்சாலைகள், ரயில் நிலை
யங்களில் அகதிகளை வரவேற்கும் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

தங்கள் பகுதிக்கு வருகை தருகின்ற
உக்ரைன் அகதிகள் பற்றிய தகவலைப்
பொலீஸ் நிலையங்களுக்கு வழங்கி
இலகுவாக அவர்கள் தங்குமிடங்களைச்
சென்றடைவதற்கு உதவுமாறு நகர
சபைப் பிரதிநிதிகளை அரசு அறிவுறுத்தி
உள்ளது.

அதேவேளை, பிரான்ஸில் ஏற்கனவே
தங்கியுள்ள உக்ரைன் பிரஜைகளது
வதிவிட அனுமதி மேலும் 90 நாட்களால்
நீடிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டி
ருக்கிறது.

உக்ரைனில் இருந்து இதுவரை ஆறு
லட்சத்து 60 ஆயிரம் பேர் வெளியேறி
யுள்ளனர் என்று அகதிகளுக்கான ஜ. நா
தூதரகம் மதிப்பிட்டுள்ளது. அவர்கள்
ஐந்து முனைகள் ஊடாக போலந்து, ருமே
னியா, ஸ்லோவேக்கியா, ஹங்கேரி,
மோல்டோவா நாடுகளின் எல்லைகளுக்குள் சென்றுள்ளனர்.

குமாரதாஸன். பாரிஸ்.
01-03-2022

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here