பிரபல பாடகர் மாணிக்கவிநாயகம் அவர்கள் சாவடைந்தார்!

0
214


பிரபல தென்னிந்திய திரையிசைப்பாடகரும் பக்தியிசைப் பாடகரும் நடிகரும் இசையமைப்பாளருமான மாணிக்கவிநாயகம் இன்று காலமானார்.

பல நூற்றுக்கணக்கான பக்திப்பாடல்களைப் பாடிய அவர், ஈழத்தமிழர்களால் வெளியிடப்பட்ட பக்திப் பாடல்கள் பலவற்றையும் பாடியுள்ளார்.

தென்னிந்திய திரைத்துறையில் தில் என்ற படத்தின் மூலம் அறிமுகமான அவர் எண்ணூறுக்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார்.

உயிரிழக்கும்போது அவருக்கு வயது 73.

மாணிக்க விநாயகம் தென்னிந்தியாவின் பிரபல பரதநாட்டிய ஆசிரியரான வழுவூர் ராமையா பிள்ளையின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here