
யாழில் வெளியாகும் நாளிதழ் ஒன்றின் ஊடகவியலாளர் ஜெயச்சந்திரன் சுலக்ஸன் அவர்களுக்கு பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் வைத்து நேற்று துப்பாக்கி முனையில் பொலீசாரால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து, துப்பாக்கியை நீட்டி கொலை அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பிலான முறைப்பாட்டை பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏற்க மறுத்துள்ளார். எனினும்
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டை அடுத்தே முறைப்பாடு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
பொலிஸ் நிலையத்திற்குள் பொருத்தப்பட்டுள்ள CCTV பதிவை பரிசோதிக்குமாறும், ஊடகவியலாளரால் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் T.கனகராஜ் அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேற்படி ஊடகவியலாளர் மீதான கொலை அச்சுறுத்தலுக்கு பல தரப்பினரும் வன்மையாக கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.