வடமராட்சியில் 10 கிலோவுக்கும் அதிகமான கேரளா கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டன!

0
1397

kansaaவடமராட்சி திக்கம் பிரதான வீதியில் பொலிஸார் நடத்திய சுற்றி வளைப்பில் 10 கிலோவுக்கும் அதிகமான கேரளா கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் வடமராட்சி பருத்தித்துறையில் இருந்து வல்வெட்டித்துறை நோக்கி வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை பொலிஸார் வழிமறித்து சோதனைக்குட்படுத்திய போதே கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸாருக்கு பிரதான வீதிகள் ஊடாகக் கஞ்சா பொதிகள் கடத்தப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்தே பொலிஸார் இந்த சுற்றிவளைப்பை நடத்தினர். வடமராட்சியின் பிரதான வீதிகளில் பொலிஸார் நிறுத்தப்பட்டு தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. வடமராட்சி பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம் ஜவ்பர் தலைமையிலான விசேட பொலிஸ் குழு இந்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

மேலும் தேர்தல் பாதுகாப்புக் கடமையில் பொலிஸார் ஈடுபடுவார்கள் எனக் கருதியே இந்த மாபெரும் கடத்தலுக்கான திட்டம் வகுக்கப்பட்டதென விசாரணைகளில் இருந்து தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேக நபரை பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் கடத்தலின் பின்னணயில் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல்கள் இருக்கலாம் என சந்தேகத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here