பிரான்சு மாவீரர் நாள் மண்டப நிகழ்வில் கலந்துகொள்வோருக்கான அறிவித்தல்!

0
253

மாவீரர் நாள் 2021 மண்டப நிகழ்வுக்கு வருகை தருவோருக்கான அறிவித்தல் ஒன்றை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு மாவீரர் நாள் ஏற்பாட்டுக் குழுவினர் விடுத்துள்ளனர். அதன் முழு விபரம் வருமாறு:-

மாவீரர் நாள் 2021 மண்டப நிகழ்வுக்கு வருகை தருவோருக்கான அறிவித்தல்!


18.11.2021


“ ஓர் உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன் ஆனால் உயிரிலும் உன்னதமானது எமது உரிமை எமது சுதந்திரம் எமது கௌரவம் ’’ – தமிழீழத் தேசியத் தலைவர் –
உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கோவிட் 19 என்ற நோயானது அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் தொடர்ந்து இருந்துகொண்டுதான் இருக்கின்றது. பேரிடரான இந்த காலச்சூழ்நிலையில் மக்களை விழிப்புடனும், சுயபாதுகாப்பையும் பேணிக்கொள்ளுமாறு அனைத்து நாடுகளின் அரசுகள் மக்களைக் கேட்டுக்

கொண்டுதான் இருக்கின்றனர்.
இதற்கு மதிப்பளிக்கும் வகையில் ஒவ்வொரு நாடுகளிலும் வாழும் தமிழீழ மக்கள் அந்தந்த நாட்டுச்சட்டங்களையும், கோவிட் 19 சுகாதார பொதுவிதி முறைகளையும் கடைப்பிடித்து வருகின்ற அதேவேளை எதிர்வரும் நாட்களில் பிரான்சு தேசத்தில் ஒவ்வொரு குடிமகனும் பொதுவெளியில் வரும்போது அவர்கள் தமக்கான தடுப்பூசிகளைப் போட்டிருப்பதுடன்,
அதன் அத்தாட்சிப் பத்திரத்தையும் அன்றையநாள் உங்களுடன் வைத்திருத்தல் வேண்டும் என்றும் அன்போடும் உரிமையோடு கேட்டுக்கொள்கின்றோம்.

வாகனங்களில் மண்டபத்திற்கு வருபவர்கள் கவனத்திற்கு!
எதிர்வரும் 27.11.2021 அன்று வாகனங்களில் வருவோரின் கவனத்திற்கு அன்றைய நாள் வாகனத் தரிப்பிடத்திற்கான வாடகைப்பணம் அதிகம் என்பதோடு ( 12 யூரோக்கள் ) அந்த பணமானது நேரடியாக மண்டபத்தின் தனிப்பட்ட உரிமையாளர்களுக்கானது என்பதையும் தெரிவித்துக் கொள்வதுடன் உங்கள் இலகுவான வருகையை TRAM ( T3B ) Porte de du la villette Cité des Sciences மற்றும் Métro 7 ( Porte de du la Villette) BUS:139/ 152/ 150 வழிகளில் மேற்கொள்ள முடியும் என்பதைத் தெரியப்படுத்திக்கொள்கின்றோம்.


முக்கிய குறிப்பு : இதுவரை கோவிட் 19 பரிசோதனை செய்யாதவர்கள், தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் உங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள மருந்தகத்தில் அவற்றைச் செய்து கொள்ளலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.


மாவீரர் நாள் ஏற்பாட்டுக் குழு – தமிழர் ஒருங்கிணைபுக் குழு – பிரான்சு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here