பிரான்சு வில்நெவ் சென் ஜோர்ஜ் RER D இல் ஒருவர் வீழ்ந்ததால் நள்ளிரவு வரை தடைப்பட்ட தொடருந்துச் சேவை!

0
341

பிரான்சில் பிரபல்யம் வாய்ந்த தொடருந்து நிலையமான வில்நெவ் சென் ஜோர்ஜ் தொடருந்து நிலையத்தின் பயணிகள் தடத்தில் இருந்து RER D தொடருந்தில் நேற்று புதன்கிழமை இரவு பயணி ஒருவர் வீழ்ந்த விபத்தையடுத்து நள்ளிரவு வரை தொடருந்து சேவைகள் நிறுத்தப்பட்டன.

இரவு 22.00 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் குறித்த நபர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதிகளவிலான மீட்புப் பணியினர் வரவழைக்கப்பட்டதுடன், தொடருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் இடைநடுவில் தொடருந்து தடத்தில் இறக்கிவிடப்பட்டனர். இதனால், பெண்கள், குழந்தைகள், மூதாளர்கள் பெரும் அவலநிலைக்கு உள்ளாகினர். நள்ளிரவு வரை பயணிகளுக்கு எந்தவித பதில் போக்குவரத்து ஒழுங்குகளும் இல்லாமல் பயணிகள் வீதிகளில் நள்ளிரவு தாண்டியும் நின்று தவித்ததைக் காணமுடிந்தது.

இப்பகுதியில் அடிக்கடி இவ்வாறான அவலநிலை இடம்பெறுவதாக பலரும் தமது அதிருப்தியை வெளியிட்டிருந்தனர். வர்த்தக நிலையங்கள் மூடப்பட்ட நிலையில், உணவு குடிநீர் இன்றி பயணிகள் தவித்த நிலையில், தொடருந்து நிலையத்தின் ஊழியர்களும் காவலர்களும் பயணிகளோடு வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டமை கவலைக்குரியதே.

இதேவேளை, இன்று வியாழக்கிழமை மதியம் முதல் குறித்த RER D தொடருந்து முன்னறிவித்தல் எதுவுமின்றித் தடைப்பட்டுள்ளது. இதனையடுத்து ஒரு மணித்தியாலத்துக்கு மேல் பயணிகள் காத்திருப்பதாகத் தெரியவருகிறது.

(எரிமலையின் செய்திப் பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here