
கிளைமோர் ஒன்று, பழைய ரவுன்ஸ்கள் சில வைத்திருந்ததாக யாழ்ப்பாணம் சிஐடியால் வடமராட்சி – நாகர்கோவில் பகுதியில் ஒருவர் இன்று (28) கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2020ஆம் ஆண்டு இராணுவ சிப்பாய் ஒருவரது கன்னத்தில் அறைந்ததாக நீண்ட நாட்களாக சுற்றுவளைப்பு தேடுதல் மூலம் தேடப்பட்ட நிலையில் சட்டத்தரணி ஊடாக சரணடைந்து, பின்னர் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.