உடற்பருமன்,நாட்பட்ட நோய்கள் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி!

0
870

பிரான்ஸில் உடற்பருமன்,மற்றும் நீரிழிவு
போன்ற நாட்பட்ட நோய்கள் (“CHRONIC DISEASES”) உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் நாளை சனிக்கிழமை தொட
க்கம் வைரஸ் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது

சுகாதார அமைச்சர் ஒலிவியே வேரன்
இத்தகவலை இன்று வெளியிட்டுள்ளார்.

புற்று நோய், நீரிழிவு, இருதய நோய்கள்
போன்றவற்றால் நீண்ட காலம் பாதிக்கப்
பட்டு பலவீனமான நிலையில் உள்ள
சுமார் நான்கு மில்லியன் பேருக்கும்
obesity எனப்படும் வழமைக்கு மாறான உடற்பருமன் உள்ள சுமார் 2.3 மில்லியன்
பேருக்கும் வைரஸ் தடுப்பூசி ஏற்றப்படவு
ள்ளது.

பிரான்ஸின் மொத்த சனத் தொகையில்
17 வீதமான ஆண்கள், பெண்கள் இருபா
லாரிடமும் உடற்பருமன் காணப்படுகிறது
என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்
றன. வைரஸ் தொற்றின் தீவிர அறிகுறி
கள் உடற்பருமன் உள்ளவர்களிடையே
அதிகமாக உள்ளது என்றும் தெரிவிக்கப்
படுகிறது. எனவே 18-50 வயதுக்கு இடை
பட்ட உடற்பருமன் உள்ள அனைவரும்
முன்னுரிமை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்
ளனர்.

இதேவேளை நாட்பட்ட நோய்கள் தொடர்
பான விவரங்களையும் சுகாதார அமை
ச்சு வெளியிட்டுள்ளது. 50 வயதுக்குட்பட்ட
பின்வரும் நோயாளிகளுக்கும் தடுப்பூசி
ஏற்றப்படவுள்ளது.

🔷சிக்கலான உயர் குருதி அழுத்தத்துடன் தொடர்புடைய இருதய நோயாளிகள்
(cardiovascular pathologies: complicated arterial hypertension)

🔷வகை ஒன்று, இரண்டு நீரிழிவு
நோயாளிகள் (types 1 and 2 diabetes).

🔷நாட்பட்ட சுவாச நோய்கள் உள்ளவர்
கள். குறிப்பாக நுரையீரல் நோய், சுவாச செயலிழப்பு, கடுமையான சளி முட்டு உள்ளவர்கள் (obstructive pulmonary disease, respiratory failure, severe asthma, pulmonary fibrosis, sleep apnea syndrome)

🔷நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு(chronic renal failure)

🔷புற்றுநோய் அல்லது வீரியம் மிக்க
ஹீமோபதி.(Cancer or malignant hemopathy

🔷நாள்பட்ட கல்லீரல் நோய்கள், குறிப்பாக சிரோசிஸ்(chronic liver diseases, in particular cirrhosis)

🔷பிறப்பால் அல்லது தொற்றி வந்த நோய் எதிர்ப்புத் தடுப்பு நோய்கள் (congenital or acquired immunosuppression)

🔷தீவிர முளை, நரம்பியல் நோய்கள் (neurological pathologies)

🔷மனநல கோளாறுகள் (psychiatric disorders)

🔷பைத்தியம் (Madness)

குமாரதாஸன். பாரிஸ்.
30-04-2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here