
பிரான்ஸின் பெருநிலப்பரப்பினுள் இன்னமும் இந்தியத் திரிபு வைரஸ்
தொற்று கண்டறியப்படவில்லை என்று
சுகாதார அமைச்சர் ஒலிவியே வேரன்
நேற்று செய்தியாளர்களிடம் உறுதிப்ப டுத்தியுள்ளார்.
இந்திய தேசத்தை வாழ்வுக்கும் சாவுக்
கும் இடையே உலுப்பிவருகின்ற தொற்
றுக்களுக்குக் காரணமானது என்று நம்பப்படுகின்ற திரிபு பிரான்ஸின் அயல் நாடுகளான பெல்ஜியம், கிறீஸ், இத்தாலி சுவிஸ் போன்ற நாடுகளில் கண்டறியப்
பட்டுள்ளது. பாரிஸ் விமான நிலையம்
ஊடாக பெல்ஜியம் சென்றடைந்த இந்
திய மாணவர் குழுவினரில் பலர் தொற்
றுக்கு உள்ளானமை கவனிக்கத்தக்கது.
அச்சமூட்டிவருகின்ற இந்தியத் திரிபு
உலகில் இதுவரை 17 நாடுகளில் கண்ட
றியப்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறு
வனம் தெரிவித்துள்ளது. பிறேசில்,தென் னாபிரிக்கா திரிபுகளைக் கண்டறியக் கையாளுகின்ற அதே வழி முறைகளி
லேயே இந்திய வைரஸ் திரிபைக் கண்டு பிடிக்கவும் முயற்சி எடுக்கப்படுவதாக
பிரான்ஸின் அதிகாரிகள் தெரிவித்துள்
ளனர்.
நாட்டுக்குள் இந்திய வைரஸ் ஊடுருவக் கூடிய எல்லைகளில் தீவிர கண்காணிப்
பைப் பேணுமாறு பிரான்ஸின் சுகாதாரப்
பணிப்பாளர் நாயகம் புதிய அறிவுறுத் தல் விடுத்திருக்கிறார். இந்திய வைரஸ் தொடர்பாக மேலும் கடைப்பிடிக்க வேண்
டிய நடைமுறைகள் மருத்துவ சேவையா
ளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
விமான நிலையங்கள் உட்பட இந்தியப் பயணிகள் உள் நுழையும் இடங்களில் முழு உஷார் நிலை பேணுமாறும் அதிகா
ரிகள் கேட்கப்பட்டுள்ளனர். அண்மையில்
இந்தியாவில் இருந்து திரும்பியவர்களை
கண்காணிப்பில் வைத்திருக்குமாறு உள்
ளூர் சுகாதாரப் பகுதியினர் கேட்கப்பட்டு
ள்ளனர்.
வைரஸின் ஒன்று, இரண்டு அலைகளுக்
குப்பிறகு மெல்லச் சீரடைந்துவருகின்ற
தொற்று நிலைவரத்தை இந்தியத் திரிபு
தலைகீழாக மாற்றிவிடக் கூடும் என்ற
அச்சம் ஐரோப்பிய நாடுகளிடையே ஏற்ப
ட்டுள்ளது.
ஆனால் உலக சுகாதார நிறுவனம் இந்
தியத் திரிபை இன்னும் “கவலைக்குரி யது” (“variant of concern”) என்ற வகைக்
குள் அடக்கவில்லை. அது இன்னமும்
கவனத்துக்குரிய திரிபு(“variant of interest”)
என்ற நிலையிலேயே குறிப்பிடப்பட்டு வருகிறது.
குமாரதாஸன். பாரிஸ்.
28-04-2021