பிரான்சில் இடம்பெற்ற தியாகி அன்னை பூபதி அவர்களின் 33-ம் ஆண்டு நாட்டுப்பற்றாளர் நினைவேந்தல்!

0
1234

தமிழீழத் தாயவள் அன்னை பூபதி அவர்களின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தலும் நாட்டுப்பற்றாளர் நினைவு வணக்க நிகழ்வும் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழ் பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று (25.04.2021) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு பணிமனையில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றன.

இந்நிகழ்வில் பொதுச்சுடரினை பிரான்சு தமிழ் பெண்கள் அமைப்பின் பொறுப்பாளர் திருமதி சுகந்தினி அவர்கள் ஏற்றிவைத்தார்.

நாட்டுப்பற்றாளர் தியாகி அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர் பிரான்சிஸ் அந்தோனி சந்தியோகு , நாட்டுப்பற்றாளர் கந்தையா சிவராஜா, நாட்டுப்பற்றாளர் மாணிக்கவாசகம் ஜெயசோதி, நாட்டுப்பற்றாளர் அலெக்சாண்டர் பவுஸ்ரின் ஆகியோரின் திருஉருவப்படங்களுக்கான ஈகைச்சுடரினை 2ஆம் லெப். ஆதவன் அவர்களின் சகோதரர், 1998 இல் கிளிநொச்சியில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் கலைமொழி அவர்களின் சகோதரர், 11.03.1990 அன்று மாவிட்டபுரம் பகுதியில் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவடைந்த வீரவேங்கை பவிதா அவர்களின் சகோதரர், 20.06.1999 அன்று கொக்குவில் பகுதியில் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவடைந்த மேஜர் இன்பன் அவர்களின் சகோதரர், நாட்டுப்பற்றாளர் பிரான்சிஸ் அந்தோனி சந்தியோகு அவர்களின் குடும்பத்தினர் ஆகியோர் ஈகைச்சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் அணிவகுத்து சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தினர்.

தொடர்ந்து பிரான்சு தமிழ்ப் பெண்கள் அமைப்பின் சார்பில் திருமதி ஜனனி அவர்களின் கவிதை இடம்பெற்றது.

நினைவுரையினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு.மேத்தா அவர்கள் ஆற்றியிருந்தார். நிகழ்வின் நிறைவாக தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுபெற்றன.

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here