யுத்தத்தின் இறுதியில் மாத்திரம் 146,700 க்கும் அதிகமான அப்பாவித் தமிழர்கள் காணாமலாக்கப்பட்டனர் என்ற உண்மையை உலகுக்கு முதன் முதலாக உரத்துச் சொல்லி சர்வதேச விசாரணைக்கான கதவுகளைத் திறந்த எங்கள் தந்தையே!!!

நீங்கள் மதத்திற்கானவர் மட்டுமல்ல, மனித குலத்திற்கானவர், தமிழ்த் தேசத்திற்கானவர்!
உங்கள் வெற்றிடத்தை நிரப்ப யாராவது இருக்கின்றார்களா என்று தேடிப் பார்க்கின்றோம் ஐயா!
கண்ணுக்கெட்டிய தூரம்வரை யாரும் தெரியவில்லை சுவாமி!
தமிழினம் சந்தித்த ஈடு செய்ய முடியாத பேரிழப்பே உங்களின் இழப்பு!

உங்கள் வழியில் இன விடுதலை நோக்கிப் பயணிப்பதே நாங்கள் உங்களுக்குச் செய்யக்கூடிய – செய்ய வேண்டிய ஆத்மார்த்த அஞ்சலி…அதைக் கடைசிவரை செய்வோம் ஐயா!

இனவிடுதலைக்கான பயணத்தில் நீங்களும் “மாமனிதரே!”
கனகரட்ணம் சுகாஸ்.