
இலங்கைக்கு எதிராக ஐ.நா.
வில் கொண்டுவரப்படும் தீர்
மானத்தை இந்தியா ஆதரிக்க
வேண்டும் என்று தமிழர் தேசிய
முன்னணியின் தலைவர் பழ.
நெடுமாறன் வலியுறுத்தியுள்ளர்.
நேற்று முன்தினம் அவர்
வெளியிட்ட அறிக்கையிலேயே
இதனைத் தெரிவித்தார். மேலும்,
“இலங்கை தமிழர்கள் மீது
அந்நாட்டு அரசு, மனித உரிமை
கள் மீறல்களை தொடர்ந்து
கடைப்பிடித்து
வருவதற்கு எதிரான கண்ட
னத் தீர்மானம் ஒன்றை பிரிட்
டன், கனடா, ஜேர்மனி உட்பட
சில நாடுகள் இணைந்து ஐ.நா.
மனித உரிமைகள் கவுன்ஸில்
கூட்டத்தில் கொண்டுவரவுள்
ளன.
இந்தத் தீர்மானத்துக்கு எதி
ராகவும், தனக்கு ஆதரவாகவும்
வாக்களிக்கும்படி பல்வேறு
நாடுகளை இலங்கை அணுகியுள்
ளது. வழக்கம்போல சீனா,
பாகிஸ்தான் ஆகிய நாடுகள்
இலங்கை அரசுக்கு ஆதரவு தெரி
வித்துள்ளன. இந்திய அரசும்
ஆதரவு தெரிவிக்க உறுதி கூறி
யுள்ளதாக இலங்கை வெளியுறவு
துறைச் செயலாளர் அறிவித்திருப்
பது தமிழர்களுக்கு அதிர்ச்சி
அளித்துள்ளது.
2009-ஆம் ஆண்டில் இலங்
கையில் போர் முடிந்த பிறகு,
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில்
நிறைவேற்றிய பல தீர்மானங்
களை ஏற்றுக்கொள்ளவும், செயல்
படுத்தவும் இலங்கை அரசு
தொடர்ந்து மறுத்து வந்துள்ளது.
இந்த நிலையில் இன்று கூட
விருக்கும் ஐ.நா. மனித உரிமைக்
குழுக் கூட்டத்தில் இலங்கை அர
சுக்கு எதிராக பிரிட்டன் உள்பட
பல நாடுகள் இணைந்து கொண்டு
வரவிருக்கும் தீர்மானத்தை இந்
திய அரசும் ஆதரிக்கவேண்டும்.
அதன் மூலம் ஈழத் தமிழர்களுக்கு
எதிரான அநீதிகளிலிருந்து அவர்
களைக் காக்க முன்வர வேண்டும்
என்று கூறியுள்ளார்.