
கிளிநொச்சி – பூநகரி காவல்துறை பிரிவு, தெளிகரை பகுதியில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (17) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
வீடொன்றில் குறித்த பெண் இரத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, பூநகரி வைத்தியசாலைக்கு சடலமாக எடுத்து செல்லப்பட்டுள்ளார்.
ரூபஸ் கிருஸ்ணகுமாரி (37-வயது) என்ற 3 பிள்ளைகளின் தாயே இவ்வாறு கொலை செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திலிருந்து கூரிய ஆயுதமும் மீட்கப்பட்டுள்ளது.