சிறிலங்காவின் எச்சரிக்கைக்கு மத்தியிலும் மாவீரர்களை நினைவேந்தத் தயாராகும் மக்கள்!

0
362

மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த அனுமதிக்க முடியாது. அவ்வாறு நடத்தினால் தனிமைப்படுத்தல் சடத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறும் சிறிலங்கா இராணுத் தளபதியின் அடாவடி ஒருபுறம் கொரோனா பீதி மறுபுறம் என இவற்றுக்கு மத்தியிலும் தமிழர்தாயகப் பகுதிகளில் மாவீரத் தெய்வங்களை நினைவுகூர மக்கள் தயாராகி வருகின்றார்கள்.

மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்துவதற்கு வடக்கில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளைத் தடுக்கும் முகமாகவே சிறிலங்கா அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும்,

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டம் நடைமுறையில் உள்ளது. மக்கள் ஒன்றுகூடுவது தொடர்பில் சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்டுள்ளார். மேற்படி நடைமுறைகளை மீறி ஏனையோரின் சுகாதாரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பொது வழியில் எவராவது செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக காவல்துறையினரால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

உலகில் எந்தவொரு நாடும் இதற்கு அனுமதி வழங்காது. எனவே விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு புத்துயிர் கொடுக்கும் வகையிலும் அவ்வமைப்புக்கு பரப்புரை செய்யும் நோக்கிலும் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்படுமனால், சுகாதார பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுமானால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும்” – என்று சிறிலங்கா இராணுவத் தளபதி எச்சரிக்கை விடுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here