

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகவும் – இலங்கையில் பிறந்தவருமான வனுஷி வால்டர் இராஜநாயகம் (வயது 39) நியூசிலாந்து பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று உறுப்பினரானார். இந்த வெற்றியின் மூலம், நியூசிலாந்தில் பாராளுமன்ற உறுப்பினரான முதல் தமிழர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
நியூசிலாந்தில் நேற்று முன்தினம் (17) சனிக்கிழமை பாராளுமன்றத் தேர்தல் இடம்பெற்றது. இதில் ஜெசிந்தா ஒர்டர்ன் தலைமையிலான லிபரல் லேபர் கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றியது.
இந்தக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வடக்கு ஒக்லாந் தின் அப்பர் ஹார்பர் தேர்தல் தொகுதியில் வனுஷிவால்டர் இராஜநாயகம் போட்டியிட்டார். இதில், அவர் 14 ஆயிரத்து 142 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பழ மைவாதக் கட்சியின் ஜாக் பெஸான்ட் 12 ஆயிரத்து 727 வாக்குகளைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
வனுஷியின் தந்தை வழி கொள்ளுப் பாட்டியான யாழ்ப்பாணத்தைப் பிறப் பிடமாகக் கொண்ட லூயிசா நேசம் சரவணமுத்து அன்றைய பிரித்தானிய – இலங்கையின் சட்டவாக்க சபையான
இலங்கை அரச சபைக்குத் தெரிவு செய் யப்பட்ட இரண்டவது தமிழ்ப் பெண்ஆவார்.
தனது ஐந்தாவது வயதில் பெற்றோ ரான தந்தை மறைந்த இராஜநாயகம் மற்றும் தாய் பிருதிவா ஆகியோருடன் வனுஷp நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்திருந்தார். மனித உரிமைகள் வழக்கறிஞரான வனுஷி வால்டர் சர்வதேச மன்னிப்புச்சபையில் முக்கிய உறுப்பினராகவும் கட மையாற்றியுள்ளார். 39 வயதான அவர்