ராஜஸ்­தானில் ஓடும் பஸ்ஸில் பாய்ந்த மின்­சாரம்; பரி­தா­ப­கரமாக 30 பேர் பலி­!

0
138

busராஜஸ்­தானில் பஸ் மீது உய­ர­ழுத்த மின்­கம்­பி அறுந்து வீழ்ந்­ததில் அதில் பய­ணித்த 30 பேர் பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்­துள்­ளனர். ராஜஸ்தான் மாநிலம் டோங் மாவட்­டத்தின் வழி­யாக பய­ணி­களை நிரப்­பிக்­கொண்டு பஸ் ஒன்று சென்று கொண்­டி­ருந்­தது.

அந்த சமயம் எதிர்­ப­ாராத வித­மாக சாலையின் குறுக்கே சென்ற உய­ர­ழுத்த மின்­கம்பி திடீ­ரென அறுந்து வீழ்ந்­தது.
இதனால் பஸ் முழு­வதும் மின்­சாரம் பாய்ந்த நிலையில் அதில் பய­ணித்த 25 பய­ணிகள் சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­தனர். மேலும் 18 பேர் காய­ம­டைந்­தனர்.
தீக்­காயம் அடைந்த பய­ணிகள் உட­ன­டி­யாக அருகில் உள்ள மருத்­து­வ­ம­னையில் சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­பட்­டனர்.

இதில் சிலரின் நிலை கவ­லைக்­கி­ட­மாக இருப்­ப­தா­கவும் அனை­வரும் ஒரு திரு­மண வீட்­டைச்­சேர்ந்­த­வர்கள் என்றும் அங்­கி­ருந்து வரும் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இந்த விபத்து தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேருந்தின் மீது மின்சாரம் பாய்ந்த அரை மணி நேரத்திற்குப் பின்னரே மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here