பிரான்சில் தமிழ்ச்சோலைப்பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்ட தாயக வரலாற்றுத் திறனறிதல்!

0
720

தியாகதீபம் திலீபன், நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதி ஆகியோரின் வரலாற்று நிகழ்வுகள் அடங்கிய தாயக வரலாற்றுத் திறனறிதல் செப் 26 மற்றும் 27 ஆகிய நாட்களில் தமிழ்ச்சோலைப் பள்ளிகளில் வளர்தமிழ் 11 ,12 இல்கற்கும் மாணவர்களுக்கு இணையவழியில் நடைபெற்றது.

ஏற்கனவே கறுப்பு யூலை தொடர்பான  இணையவழித் திறனறிதல் தமிழ்சோலைத் தலைமைப் பணியகத்தின் தமிழியல் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு கடந்த யூலையில் நடைபெற்றிருந்த நிலையிலேயே  தமிழ்ச்சோலைப் பள்ளிகளில்  வளர்தமிழ் 11,12 கற்கும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

தியாகதீபம் திலீபன், அன்னைபூபதி தொடர்பான 75 விழுக்காடான கேள்விகளோடு உலகவரலாற்றில் இடம்பெற்ற அறவழிப்போராட்டங்கள் தொடர்பான  25  விழுக்காடான கேள்விகளும் இத்திறனறிதலில் இடம்பெற்றிருந்தன. எமது அறவழிப்போராட்டங்கள் பன்னாட்டு நெறிமுறைகளின்படி நடைபெற்றுள்ளதோடு  உலகின் ஏனைய அறவழிப்போராட்டங்களுக்கு நிகரானது என்ற தெளிவை தமக்கு ஏற்படுத்தியுள்ளதாக இத்திறனறிதலில் பங்குகொண்ட மாணவர்கள் தெரிவிக்கின்றனர். 

இத்திறனறிதலுக்குப் பயன்படுத்தப்பட்ட புதிய தொழில்நுட்பமானது எதிர்காலத்தில் தமிழ்மொழியை இளந்தலைமுறையினரிடத்தே அவர்கள் விரும்பும் முறையிலேயே கொண்டு செல்லவும் தேர்வுகளை இலகுபடுத்தவும் பயனுள்ளதாகவும் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. 

அடுத்த வரலாற்றுத் திறனறிதல் மாவீரர் நினைவு சுமந்த தரவுகளுடன் நவம்பர் மாதம் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தால் இன்னும் விரிவுபடுத்தப்பட்ட முறையில் நடைபெறும் என்று தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியக வட்டாரத்தில்  அறியமுடிகிறது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here