செங்கலடி விபத்தில் ஒருவர் பலி;இருவர் படுகாயம்!

0
247

மட்டக்களப்பு செங்கலடி நகரில் இன்று வேக கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று விபத்தை ஏற்படுத்தியதில் ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை மாலை செங்கலடி எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்னால் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பிழையான திசையில் சென்ற கார் வீதியால் நடந்து சென்ற ஒருவர் மீதும், அவ் வீதியில் துவிச்சக்கர வண்டியில் சரியான பாதையில் சென்ற ஒருவரையும் மோதித் தள்ளிச் சென்று மறுபக்கத்தில் இருந்த கடையில் மோதி மின் கம்பத்தில் மோதி நின்றுள்ளது.

இவ் விபத்தில் கொம்மாதுந்துறையைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தகப்பனான சிவசுப்பிரமணியம் ரமேஷ்குமார் (40) என்பவர் உயிரிழந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here