அம்பாறை வீரமுனைப் படுகொலையின் 30 ஆம் ஆண்டு நிறைவு இன்று!

0
650

12.08.1990 அன்று இதே நாளில் அம்பாறை மாவட்ட வீரமுனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் வைத்து இனவெறியர்கள் நடாத்திய கோரத்தாண்டவத்தில் 55 தமிழர்கள் கொல்லப்பட்டமையை நினைவு கூரும் நாள் இன்றாகும்.

12.08.2008 அன்று 18 ஆவது ஆண்டு நிறைவு நாளில் நினைவுச் சிலை ஒன்று திறந்து வைக்கப்பட்டு ஆண்டு தோறும் நினைவு கொள்ளப்பட்டு வருகிறது.

12.08.1990 அன்று வீரமுனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் வைத்து இனவெறியர்கள் நடாத்திய கொலைவெறித் தாக்குதலில் 55 தமிழர்கள் அவ்விடத்திலேயே கதறக்கதற சுட்டும் வெட்டியும் கொல்லப்பட்டமை தெரிந்ததே. இதற்கு முஸ்லிம் இனவெறியர்களும் துணைபோயிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
அந்த துர்ச் சம்பவத்தை நினைவு கூர்ந்து வீரமுனை மக்கள் வீரமுனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயச் சந்தியில் நினைவுத் தூபியொன்றை அமைத்துள்ளனர்.

1954 முதல் 1990 வரை இதே வீரமுனை மக்கள் பல காரணங்களாலும் இம்சைப்படுத்தப்பட்டு வந்தனர். ஆனால் 1990 ஆனி ஆடி காலத்தில் சுமார் 200 பேர் கொல்லப்பட்டனர் அல்லது காணமல் போயிருந்தனர்.
இது தொடர்பில் பல விசாரணைகள் நடைபெற்ற போதும் அது குறித்து சரியான விளக்கங்கள் முன்வைக்கப்படவில்லை. அத்துடன் குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படவோ இல்லை.
இதே போல் மட்டக்களப்பின் சத்துருக்கொண்டான், உள்ளிட்ட பல இடங்களில் படுகொலைகள் நடைபெற்றதுடன். வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகம், சித்தாண்டி முருகன் ஆலயம் போன்ற இடங்களிலிருந்த அகதி முகாம்கள் இராணுவம் மற்றும் காவல்துறையினால் சுற்றிவளைக்கப்பட்டு முஸ்லிம் களது உதவியுடன் பெருந்தொகையானோர் கைது செய்யப்பட்டு காணாமல் போயினர். அத்துடன் பயணங்களின் போதும் வேறு இடங்களில் வைத்தும் பல தமிழர்கள் கடத்தப்பட்டுமிருந்தனர் எனபது குறிப்பிடத்தக்கது.

சம்மாந்துறை வீரமுனையின் ஏதும் அறியாத அப்பாவி தமிழ் மக்களை வீரமுனை சிந்தாயாத்திரை பிள்ளையார்
ஆலய வளாகம் என்று கூட பார்க்காமல் விரட்டி விரட்டி பெண்கள் சிறுவர்கள்,கர்ப்பிணிகள், முதியவர்கள் என்று கூட பாராது மிகவும் அகோரமான முறையில் பாசிச கொடுங்கோல் இஸ்லாமிய காடையர்களால் கொன்று குவித்தனர். இவர்கள் தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே கொன்று பிணமாக்கப்பட்டார்கள்.

இவ் ஊரில் ஓடமுடியாமல் நாலாபுறமும் சுற்றி வளைத்து வீரச்சோலை, மல்லிகைத்தீவு, சொறிக்கல்முனை, மல்வத்தை, வளத்தாப்பிட்டி போன்ற தமிழ் கிராமத்தையும் நரபலியெடுத்து கோரத்தாண்டவம் ஆடிய முஸ்லிம் பயங்கரவாதிகள் இன்று வீரமுனை தமிழர் படுகொலை மறைக்க ஏறாவூர் முஸ்லிம் சுகைதாக்கள் தினம் எனும் பெயரில் தமிழரிடம் தாம் செய்த தவறை மன்னிப்பு கேட்காமல் இன்னும் தமது இனக்குரோதத்தை விதைக்கின்றார்கள்.

அம்பாறை மாவட்டத்தில் இருந்து தமிழர்களை முற்றாக அழிக்க வேண்டும் என்றே இந்த இனப்படுகொலை இடம்பெற்றது. இப்படியான விடயங்களை செய்தவர்களுக்கு இன்னும் தண்டனை கூட கிடைக்கவில்லை. இருந்த போதிலும் இங்கு கொன்று குவிக்கப்பட்ட ஆன்மாக்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி நினைவேந்தல் வருடா வருடம் நடாத்தப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here