பிரான்சில் சுதந்திர தின கொண்டாட்டங்கள் ஆரம்பம்!

0
224
பிரான்சில் இம்முறை கொரோனா காரணமாக சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் அமைதியான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. 
பெரும்பாலான மாநகரசபைகள் வாணவேடிக்கை நிகழ்வை ரத்து செய்துள்ளபோதும் சில மாநகரசபைகள் நள்ளிரவு வாணவேடிக்கை நிகழ்வை நடாத்தியிருந்தன.

1979ஆம் ஆண்டு, அப்போதைய ஜனாதிபதியாகவிருந்த வலரி ஜிஸ்கார் தெஸ்தன் ஆட்சிக்கு வந்த போது ஜுலை 14ம் திகதி தேசியதினத்தின் போது, வழமையான அவெனியூ சோம்ப்ஸ் எலிசேயில் நடந்த வந்த, இராணுவ அணிவகுப்பினை, République இற்கும் Bastille இற்கும் இடையில் தடம் மாற்றினார்.
இதனால் இந்த அணிவகுப்பில் குதிரைப்படையணி, கவசவாகனப் படையணி, தாங்கிப் படையணிகள் என்பவை பங்கு பற்ற முடியாது போனது.
அதே போல் இந்த 2020 தேசியதினம், கொரோனாச் சூழலில் முதன் முதலாக மக்கள் பங்கு பற்ற அனுமதி வழங்கப்படாத தேசிய தினக் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. இம்முறை சோம்ப்ஸ் எலிசே முடிவுப் பகுதியான கொன்கோட் சதுக்கத்தில் (Place de la Concorde) இராணுவப்படையணிகள் நிலைகொண்டிருந்தாலும், குதிரைப் படையணி, கவசவாகனம் மற்றும் தாங்கிப் படையணிகளும் இதில் பங்கு பெற மாட்டாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here