அதிசயிக்கவைத்த சூரிய கிரகணம்!

0
670

தமிழர் தாயகம் உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளில் இன்று சூரிய கிரகணம் இடம்பெற்றது.

தாயகத்தில் மக்கள் உணவு குடிநீர் அருந்தாமல் காத்திருந்து கிரகணம் நிறைவடைந்த பின்னரே உணவருந்தியுள்ளனர்.

இந்த நிலையில் கிரகணத்தின் போது உலக்கைகள் செங்குத்தாக நிற்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இன்றைய தினத்தின் பின்னர் அடுத்த கிரகணம் வரும் 2022 ஆம் ஆண்டுதான் இந்தியாவில் தெரியும் எனவும் கூறப்பட்டுகின்றது.

இதேவேளை கிரகணத்தின் போது தமிழகத்தின் தருமபுரியில் உலக்கை செங்குத்தாக நிற்கும் வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

பொதுவாக உலக்கையின் முனை தட்டையாக இருக்காது. அதனால் இது செங்குத்தாக நிற்க வைக்க முடியாது. ஆனால் கிரகணத்தின்போது இந்த உலக்கை செங்குத்தாக நிற்கும். கிரகணம் முடிந்த பிறகு இது தானாக விழுந்துவிடும்.

இதேவேளை நமது முன்னோர்கள் இது போன்ற செய்முறை விளக்கங்கள் மூலமே கிரகணம் ஏற்படுவதையும் முடிவதையும் கண்டறிந்தனர்.

இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக கிராமப்புறங்களில் உலக்கையை நிற்க வைப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அது போல் நெல்லை, திருப்பூர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும் உலக்கையை செங்குத்தாக நிற்க வைக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இது மட்டுமின்றி, அம்மிக்கல்லையும் கிராம மக்கள் செங்குத்தாக நிற்க வைப்பர். அம்மிக்கல்லின் முனையும் தட்டையாக இருக்காது.எனினும் அந்த அம்மிக்கல்லும் கிரகணத்தின் போது நிற்கும்.

மேலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் தாம்பால தட்டில் ஆரத்தி கரைக்கப்பட்டு அதில் உலக்கையை அங்கிருக்கும் மக்கள் நிற்க வைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here