” தமிழ் பேரரசு கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு மற்றும் அதற்கான அதிகாரங்கள் பற்றிய அறிவிப்பு!

0
296

தமிழ் நாட்டில் மிக வேகமாக வளர்ந்து வரும் கட்சி “தமிழ்ப் பேரரசு கட்சி”. நம் கட்சியின் எதிர்கால நலன் கருதி, ஒழுக்கத்தோடும், நேர்மையோடும், கடமை உணர்வோடும் கூடிய ஒரு மாபெரும் கட்டமைப்பினை உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது. இப்பூமிப்பந்தின் ஆதி இனமான நம் தமிழினத்தின் தாய் மண், தமிழ் மொழி, கலை, கலாச்சாரம் , பண்பாடு மற்றும் வரலாற்றை காக்க வேண்டியிருப்பதோடு மட்டுமல்லாமல் இழந்த நம் உரிமைகள் அனைத்தையும் மீட்கவும் வேண்டியிருக்கிறது. எனவே அறத்துடன் கூடிய அர்ப்பணிப்போடு பணியாற்றவும், மிகுந்த கட்டுப்பாடுகளுடன் செயல்படவும் கீழ்க்கண்ட விதிமுறைகள் வகுக்கப்படுகின்றன. அவற்றை நாம் உறுதியோடு கடைப்பிடிக்க வேண்டும் என்கிற உயரிய நோக்கோடு “ஒழுங்கு நடவடிக்கைக் குழு” அமைக்கப்படுகிறது.

இக்குழுவின் தலைமைப் பொறுப்பினை,

பேராசிரியர் திரு. மு.இரகுநாதன். பி.இ., எம்பிஏ.,
அமைப்புச் செயலாளர்,
தமிழ்ப் பேரரசு கட்சி.
(அலைபேசி எண்: 8610983361) ஏற்கிறார்.

மேலும் இக்குழுவின் உறுப்பினர்களாக,

  1. திரு.சு.கண்ணன். பிடெக்.,
    மாநில துணைப் பொதுச் செயலாளர்,
    தமிழ்ப் பேரரசு கட்சி.
    (அலைபேசி எண்:9486609987).

2 . திரு.தே.குபேந்திரன். எம்.ஏ.,எம்பில்.,பிஎச்டி.,
மாநில துணைப் பொதுச் செயலாளர்,
தமிழ்ப் பேரரசு கட்சி.
(அலைபேசி எண்: 9585193593)

  1. திரு.கு. முடிமன்னன்,
    ( காவல்துறை ஓய்வு )
    அரியலூர் மாவட்டச் செயலாளர்,
    தமிழ்ப் பேரரசு கட்சி.
    (அலைபேசி எண்:9498159153).
  2. திரு. அகம் பாபு. பி.ஏ.,
    நிர்வாகக் குழு உறுப்பினர்,
    தமிழ்ப் பேரரசு கட்சி.
    (அலைபேசி எண்:7397252721).

ஆகியோரையும் கொண்ட ஒழுங்கு நடவடிக்கைக் குழு இன்று 31.05.2020 முதல் செயல்பாட்டிற்கு வருகிறது.

நோக்கம்:

1.தமிழ்ப் பேரரசு கட்சி ஜனநாயக அடிப்படையில் கருத்துச் சுதந்திரம் கொண்ட கட்சி என்பது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியமானது கட்சிக்குள் பொது ஒழுக்கம், தனிமனித ஒழுக்கம் மற்றும் அறம் சார்ந்த கட்டுப்பாடு ஆகியவற்றைப் பேணிக்காப்பது.

2 .ஒழுங்கீனங்கள் எவை எவை என்பதை வரையறுத்து உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் செயல்பாட்டில் தெளிவு உருவாக்கி வழி நடத்துவது.

  1. ஒழுங்கீனங்களை விசாரித்து ஒழுங்குபடுத்த, தேவை ஏற்படும்போது நடவடிக்கையும் எடுக்க விதிமுறைகளை உருவாக்கி நடைமுறைப்படுத்துவது.
  2. ஒழுங்கு நடவடிக்கை செயல்முறை எல்லோரும் அறிந்ததாய் வெளிப்படைத்தன்மையுடன் இருக்கச் செய்வது. விதிமுறைகளும் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் செயல்பாடுகளும்:
  3. பொதுச் செயலாளர், மற்றும் தலைவர் நீங்கலாக கட்சியின் அனைத்து பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் வரை அனைவரது மீதும் எழும் குற்றச்சாட்டுகள், அதிகார அத்துமீறல்கள், அடக்குமுறை, மற்றும் விதிமீறல்கள், ஊழல் குற்றச்சாட்டுகள், இவைகளனைத்தையும்
    இக்குழு விசாரணை செய்து நடவடிக்கை அறிக்கையை பொதுச் செயலாளரிடம் பரிந்துரைக்கும்.
  4. பொதுச் செயலாளர், தலைவர் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர்கள் மீது எழும் குற்றச்சாட்டுகளை கட்சியின் செயற்குழு விசாரித்து நடவடிக்கை எடுக்கும்.

3.மாநில, மண்டல , மாவட்ட , ஒன்றிய நிர்வாகிகள் அவரவர் அதிகார வரம்பை மீறிச் செயல்படும் போது இக்குழு விசாரணை செய்யும்.

4.கட்சி நிர்வாகிகளுக்கிடையே ஏற்படும் மனக்கசப்புகளை சரி செய்து இக்குழு ஒழுங்கு படுத்தும்.

5.செயல்படாமல் இருக்கும் கட்சி நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்கவும், விசாரணை செய்யவும் இக்குழுவுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.

6.ஒன்றிய நிர்வாகிகள் முதல் மாவட்ட, மண்டல, மாநில நிர்வாகிகள், நம் கட்சியின் அனைத்து அணியினர் மற்றும் அனைத்து உறுப்பினர்கள் வரை அனைவரும் ஏதேனும் புகார் சொல்ல விரும்பினால் அந்த புகாரினை இவ்வொழுங்கு நடவடிக்கைக் குழுவிடம் முதலில் எழுத்துப் பூர்வமாகத் தெரியப்படுத்த வேண்டும். இக்குழு அப்புகார்களை தீர விசாரணை செய்து விதிமீறலில் ஈடுபட்டவர்கள் மீதான தகுந்த நடவடிக்கைக்கு பரிந்துரைக்கும்.

7.கட்சி நிர்வாகிகள் தவறான வழியில் நிதி திரட்டல், மற்றும் நிதி மோசடி தொடர்பாக வரும் புகார்களை இக்குழு விசாரணை செய்யும்.

8.புதிய பொறுப்பாளர்களை நியமனம் செய்யும் போது, நியமிப்பவர்கள் நியமனம் சம்மந்தப்பட்ட அறிவிப்பினை ஒழுங்கு நடவடிக்கை குழுவிடம் கட்டாயம் தெரியப்படுத்த வேண்டும்.

9.கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுதல், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் வகையில் செயல்படுதல், தனி மனித ஒழுக்கத்திற்கு மாறாக நடத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளை இக்குழு விசாரணை செய்யும்.

  1. ஊடகங்களில் பேட்டிகள் கொடுக்க அனைவருக்கும் முழுச் சுதந்திரம் உண்டு. ஆனால் தன்னிச்சையான அறிக்கைகள் வெளியிடுதல், கட்சியின் கொள்கை மற்றும் தலைமைக்கு எதிராக பத்திரிக்கைகள், ஊடகங்கள் மற்றும் வலைதளங்கள் போன்றவற்றில் தோன்றி பேட்டி கொடுத்தல், பொது இடங்களில் விமர்சித்தல் ஆகியவை கூடாது. மேலும் தனிப்பட்ட மனிதர்களையோ, மாற்றுக் கட்சியினரையோ தனிப்பட்ட வகையில் விமர்சித்தல் மற்றும் மாற்றுக் கட்சியின் உள் விவகாரங்களை ஆதரித்தும், எதிர்த்தும் கருத்துகள் பதிவிடுதல் கூடாது. மீறுவோரை இக் குழு விசாரணை செய்து கடுமையான நடவடிக்கைக்குப் பரிந்துரைக்கும்.
  2. சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையில் சாதி, மதம், பெண்கள் குறித்து கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராகப் பேசி, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நிர்வாகிகளை இக்குழு விசாரணை செய்யும்.
  3. கட்சித் தலைமை எடுக்கும் கூட்டணி நிலைப்பாடுகளை மதிக்காமல் தன்னிச்சையாக செயல்படுதல் ,
    கட்சிக்கு ஆபத்தான முறையில் பிற கட்சியுடன் கூட்டாக செயல்படுதல், பிற கட்சியின் தூண்டுதல் அல்லது தொடர்புடன் கட்சிக்கு எதிராக செயல்படுதல், பிற கட்சிக்குப் பிரச்சாரம் செய்தல், தேர்தலில் தனித்துப் போட்டியிடுதல், வேட்பு மனுவை திரும்பப் பெறுதல் மற்றும் இது போன்ற பிற மிகக் கடுமையான, வெளிப்படையான ஒழுங்கீனங்களுக்கும் மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றாமல் அவரை உடனடியாக தற்காலிக பதவி நீக்கம் மற்றும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கம் செய்துவிட்டு, பின்னர் விசாரணை நடத்தி அவர் மீதான நடவடிக்கையை இக்குழு உறுதிப்படுத்தும்.

மேற்கண்ட கட்சியின் அனைத்து விதிமுறைகளையும் மீறுவோர் மீது விசாரணை நடத்தி, தயாரிக்கப்பட்ட விசாரணை அறிக்கையை, தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளரிடம் , ஒழுங்கு நடவடிக்கைக் குழு ஒப்படைக்கும்.

புகாருக்கு உட்பட்ட நபரிடம் விளக்கம் கேட்டு ஒரு வார கால அவகாசம் அளிக்கப்படும். தேவைப்பட்டால் மேலும் சில நாட்கள் நீட்டிக்கப்படும். விளக்கம் நேர்மையற்றதாக இருக்கும் சூழலில், விதி மீறலில் ஈடுபட்டவர் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேற்கண்ட அனைத்து அதிகாரங்களும் இந்த ஒழுங்கு நடவடிக்கைக் குழுவிற்கு வழங்கப்பட்டு, 31.05.2020 முதல் செயற்பாட்டுக்கு வருகிறது.
எனவே தமிழ்ப் பேரரசு கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கட்சி நலன் கருதி இக்குழுவிற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கிட வேண்டுமென உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,

வ. கௌதமன்,
பொதுச் செயலாளர் ,
தமிழ்ப்பேரரசு கட்சி.
“சோழன் குடில்”
31.05.2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here