ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்படும் ஆபத்து: சர்வதேச அமைப்பு எச்சரிக்கை!

0
455

ஒரு மில்லியனிற்கும் அதிகமானவர்கள் கொரோனா வைரசினால் பாதிக்கப்படும் ஆபத்துள்ளது என சர்வதேச மனிதாபிமான அமைப்பொன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

பலவீனமான நிலையில் உள்ள நாடுகளிற்கு உடனடி உதவிகளை வழங்காவிட்டால் ஒரு மில்லியனிற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என சர்வதேச மீட்பு குழு என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில் வைரஸ் பரவுவதை குறைப்பதற்காக நிதி மற்றும் மனிதாபிமான உதவிகள் அவசியம் என அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

பலவீனமான நிலையில் உள்ள சிரியா ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் பாரியளவில் பரவுவதை தடுப்பதற்கு அந்த நாடுகளிற்கு நிதி உதவி வழங்கப்படவேண்டும் என சர்வதேச மீட்பு குழு தெரிவித்துள்ளது.

வலிமையான பதில்நடவடிக்கையை எடுப்பதற்கு சிறிதளவு காலஅவகாசமே உள்ளது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகசுகாதார ஸ்தாபனம் மற்றும் லண்டனின் இம்பீரியல் கல்லூரியின் தரவுகளை வைத்து தனது அறிக்கையை வெளியிட்டுள்ள சர்வதேச மீட்பு குழு சர்வதேச அளவில் 500 மில்லியன் முதல் ஒரு பில்லியன் வரையிலானவர்கள் பாதிக்கப்படும் ஆபத்துள்ளது என தெரிவித்துள்ளது.

உலகின் மோதல்களால் பாதிக்கப்பட்ட நாடுகள் மற்றும் ஸ்திரமற்ற நிலையில் உள்ள நாடுகளில் 3 மில்லியன் பேர் உயிரிழக்கும் ஆபத்துள்ளது எனவும் சர்வதேச அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இந்த புள்ளிவிபரங்கள் எங்களை விழித்தெழச்செய்யவேண்டும் என சர்வதேச மீட்பு குழுவின் தலைவர் டேவிட் மில்லிபான்ட் தெரிவித்துள்ளார்.

இந்த தொற்றுநோயின் பேரழிவையும்,சமமற்ற தாக்கத்தினையும் உலகின் பலவீனமான நாடுகளும் மோதல்களில் சிக்குண்டுள்ள நாடுகளும் இனிமேல்தான் எதிர்கொள்ளப்போகின்றன என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here