முகமாலை ஏ-9 பாதை திறப்பும் புலிகளின் யாழ். வருகையும்: 20 வருடங்கள் நிறைவு!

0
1090

யாழ் கண்டி பிரதான வீதி (ஏ.9) முகமாலை திறப்பு என்ற உணர்வுபூர்வமான நிகழ்வு இடம்பெற்று இன்றுடன் 20 வருடங்கள் நிறைவடைகின்றன. ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக மக்கள் பயணம் செய்ய முடியாதபடி சிங்களப் படையினரால் மூடப்பட்டுக் கிடந்த ஏ.9 எனப்படும் யாழ் -கண்டி பிரதான வீதி அதிகாரபூர்வமாக 08.04.2002 அன்று திறந்து வைக்கப்பட்டது.

இப்பாதை திறந்து வைக்கப்பட்ட அதேவேளை யாழ் குடாநாட்டில். அரசியல் பணிகளை மேற்கொள்வதற்கெனச் சென்ற 15 தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு மகிழ்ச்சி ஆரவாரங்களுடன் தூக்கி அழைத்துச் சென்றனர். இக்காட்சி வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

மக்கள் எழுச்சியுடன் கலந்துகொண்ட இவ்வுணர்வு பூர்வமான நிகழ்வில் விடுதலைப் புலிகளின் முக்கிய இராணுவத் தளபதிகள் கேணல் பானு, கேணல் தீபன் ஆகியோருடன் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களும், நோர்வேயின் போர்நிறுத்தக் குழுவின் தலைவர், கிளிநொச்சி மாவட்ட காண்காணிப்புக்குழு உறுப்பினர்கள், கிளிநொச்சி அரசாங்க அதிபர் மற்றும் யாழ் குடாநாட்டுக்கான சிறீலங்கா இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் சிசிர விஜயசூரியாவும் மேலும் இரு இராணுவ உயரதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here