பிரான்சில் அதிவேகமாகப் பரவும் கொரோனா: அரச வர்த்தமானி இன்று வெளியாகியது!

0
1964

பிரான்சில் அத்தியாவசியம் இல்லாத வர்த்தக நிலையங்களை மூடுவது என்று நள்ளிரவு விடுக்கப்பட்ட அரசு அறிவித்தலின் வர்த்தமானி இன்று வெளியாகி உள்ளது. அதன்படி இந்த தடை உத்தரவு ஏப்ரல் 15 ஆம் திகதிவரை நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூடப்படவேண்டிய மக்கள் கூடும் இடங்களின் விவரங்கள் :

*கேட்போர் கூடங்கள், மாநாட்டு மண்டபங்கள், கூட்டம் நடத்தும் அறைகள், காட்சி மற்றும் பல்நோக்கு அரங்குகள் (Salles d’auditions, de conférences, de réunions, de spectacles ou à usage multiple)

  • வணிக வளாகங்கள் (Centres commerciaux)
  • உணவகங்கள், மதுபானம் அருந்தகங்கள். (Restaurants et débits de boissons)

*நடன, நாட்டிய அரங்குகள், சிறுவர் விளையாட்டு அரங்குகள் (Salles de danse et salles de jeux)

*நூலகங்கள், ஆவணக் காப்பு நிலையங்கள் (Bibliothèques, centres de documentation)

*கல்விக்கண்காட்சி மண்டபங்கள் (Salles dexpositions)

*விளையாட்டு உள்ளரங்குகள் (Etablissements sportifs coverts)

*அருங்காட்சியகங்கள்(Musées)

இவைதவிர –

பலசரக்கு கடைகள், (alimentaires) மருந்தகங்கள் (pharmacies,) வங்கிகள் (banques), எரிபொருள் நிரப்பு நிலையங்கள்( stations-essence), bureaux de tabac ஆகியன மாத்திரம் திறந்திருக்க அனுமதிக்கப்படும்.

இதேவேளை,

பிரான்சு கொரோனாத் தொற்றின் ஆபத்தான மூன்றாவது கட்டத்தை (STADE 3) அடைந்துள்ளது. தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 4500 இனைத் தாண்டி உள்ளது. இதனைத் தேசியச் சுகாதார இயக்குநர் ஜெரோம் சொலமொன் தெரிவித்துள்ளார்.

இதுவரை 91 பேர் பிரான்சில் «Covid-19» எனப்படும் கொரோனா வைரசினால் கொல்லப்பட்டுள்ளனர். 

வைரஸ் தொற்றானது நாடு முழுவதும் மிகவும் வேகமாகப் பரவி வருவதாகவும், அத்தியாவசியத் தேவைகள் இன்றி, வெளியெ செல்ல வேண்டாம் எனவும் மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

பிரான்சில் ஈபிள் கோபுரம் உள்ளிட்ட அனைத்து சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டுள்ளமையும், நாளைமுதல் அனைத்து அரச, தனியார் கல்வி நிலையங்களும் மூடப்படுகின்றமையும், நேற்று சனிக்கிழமை நள்ளிரவு முதல் அனைத்து உணவகங்கள், மதுபான அருந்தகங்கள், திரைப்பட மாளிகைகள் மற்றும் இதர கேளிக்கை நிகழ்வுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளமையும் தெரிந்ததே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here