பிரான்சு பாரிஸ் நகரில் பேரெழுச்சிகொண்ட முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 6 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

0
507

பிரான்சு பாரிஸ் பகுதியில் மே 18 முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 6 ஆம் ஆண்டு நினைவேந்தல் பேரணி நிகழ்வு பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை, பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் நேற்று திங்கட்கிழமை மிக பேரெழுச்சியுடன் நடைபெற்றது.

Place de la La chapelle பகுதியில் இருந்து பிற்பகல் 2.30 மணியளவில் பேரணி புறப்பட்டது. தொடர்ந்து பேரணி அமைதியாக நகர்ந்து Place de la République பகுதியைச் சென்றடைந்து அங்கு அமைக்கப்பெற்றிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி யின் முன்பாக வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் பொதுச் சுடரினை பிரான்சு தமிழீழ மக்கள் பேரவைச் செயலாளர் தினேஸ் அவர்கள் ஏற்றிவைக்க, ஈகைச் சுடரினை முள்ளிவாய்க்காலில் உறவுகளை இழந்த சகோதரி ஒருவர் ஏற்றிவைத்தார்.IMG_1452
DSCN7067
அகவணக்கத்தைத் தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் உறவுகளை இழந்த சகோதரன் ஒருவர் மலர் வணக்கம் செலுத்தினார். தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட பொதுமக்கள் மலர்வணக்கம் செலுத்தினர்.mulli 2

தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின. இதில் ஆரம்ப உரையை தமிழீழ மக்கள் பேரவை உறுப்பினர் மோகனதாஸ் அவர்கள் ஆற்றினார். அடுத்து, அங்கு ஈழநாதம் சஞ்சிகை வருகை தொடர்பான பிரசுரம் வெளியிட்டு வைக்கப்பட்டது. அதன் சிறப்புப்;பிரதியை தமிழகத்தில் இருந்து வருகைதந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் திரு. வேல்முருகன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.மற்றும் முள்ளிவாய்க்காலில் உறவுகளை இழந்த சகோதரனும் சிறப்புப் பிரதியை பெற்றுக்கொண்டார்.mulli

தொடர்ந்து ஈழநாதம் பத்திரிகையின் ஆசிரியர் ஜெயராஜ் அவர்கள் ஈழநாதம் பத்திரிகையின் 2009 முள்ளிவாய்க்கால் வரையில் அதன் சவாலான வருகை பற்றியும் வரவிருக்கும் ஈழநாதம் சஞ்சிகை பற்றியும் எடுத்துரைத்தார்.
IMG_1438

DSCN7154

DSCN7151

DSCN7143

DSCN7138

தொடர்ந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் திரு. வேல்முருகன் அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர்தனது உரையில், சிறிலங்கா அரசு எமது மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள் வன்கொடுமைகள் தொடர்பாக ஆவேசமாக எடுத்துரைத்தார். நாம் ஒன்றுபட்டு எமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி கோரி சர்வதேசத்தின் கதவுகளைத் தட்டவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

IMG_1462
DSCN7072

IMG_1465

IMG_1477

தொடர்ந்து பிரான்சு தமிழ் பெண்கள் அமைப்பு, குர்திஸ்தான் பிரதிநிதிகள் மற்றும் மாநகரசபை உறுப்பினர் போன்றவர்களின் பிரெஞ்சு மொழியிலான உரைகளும் இடம்பெற்றிருந்தன. அவர்கள் எமது போராட்டங்களுக்கு தமது ஆதரவை உணர்வுபொங்கத் தெரிவித்திருந்தனர்.DSCN7033

DSCN7040

தொடர்ந்து, உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் ஒரு பொதுக் கோரிக்கையாக இதுவரை காணாமற்போன 146 679 பேருக்கு என்ன நடந்தது? அவர்கள் உயிரோடு உள்ளனரா? என்ற கோரிக்கையை முன்வைத்து பிரான்சு தமிழீழ மக்கள்பேரவையின் சார்பில் சர்வதேச அரசுகளுக்கும் சர்வதேச சமூகங்களுக்கும் மனு கையளிக்கப்பட்டது.
content/uploads/2015/05/DSCN7008.jpg”>DSCN7008

IMG_1487

IMG_1488

DSCN7015
DSCN7077

DSCN7081

DSCN7084

தொடர்ந்து பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக் கழக உறுப்பினர்கள் வழங்கிய நாடகம் மற்றும் செவ்ரோன் மாணவ மாணவிகளின் நடிப்பில் ஆசிரியை ரேணுகாவின் நெறிப்படுத்தலில் ‘நெஞ்சை விட்டகலாத வடு” என்ற நாடகமும் அனைவரின் கண்களையும் பனிக்கவைத்தன.

தொடர்ந்து செவ்ரொன் மாணவிகளின் எழுச்சி நடனம் அனைவரையும் கவர்ந்திருந்தது. அடுத்து பிரான்சு இளையோர் அமைப்பினரால் அனைவருக்கும் வழங்கப்பட்ட எமது போராட்டத்தின் நோக்கம் எழுதப்பட்ட பலூன்கள் ஒரே நேரத்தில் பறக்கவிடப்பட்டமை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.DSCN7047

DSCN7055

DSCN7058
DSCN7135

DSCN7129

DSCN7045

DSCN7042

DSCN7028

DSCN7024

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here