பிரான்சு பாரிசில் நேற்று கடும் வன்முறை:50 இற்கும் மேற்பட்டோர் படுகாயம்!

0
585

நேற்று வியாழக்கிழமை பிரான்சின் தலைநகர் பரிசில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பலத்த வன்முறை வெடித்தது. அதில் ஆர்ப்பாட்டக் காரர்கள் மற்றும் காவல்துறையினர் உள்ளிட்ட பலர் காயமடைந்தனர். 

குறிப்பாக பரிஸ் 8 ஆம் வட்டாரத்தில் உள்ள Place Saint-Augustin அருகே பெரும் கலவரம் வெடித்தது. கலவரத்தை அடக்க முற்பட்ட காவல்துறையினர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. பின்னர் காவல்துறையினர் பதில் தாக்குதல் நடத்தினர். காவல்துறையினர் மீது கற்கள் வீசி தக்குதல் நடத்தியதால் அவர்கள் கண்ணீர் புகை வீசி பதில் தாக்குதல் நடத்தினர். 

இந்த மோதலின் முடிவில் 16 காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தனர். 20 போராட்டக்காரர்கள் காயமடைந்திருந்தனர். 

பரிசில் நேற்றைய நாளில் 56,000 பேர் பரிசில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஒரு மாதங்களையும் கடந்து தொழிலாளர்கள் பணிப்புறக்கணிப்பு இடம்பெற்று வரும் நிலையில் மக்கள் பெரும் அவலங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here