கொழும்பு நகரில் சட்டவிரோத பதாதைகள், சுவரொட்டிகள் அகற்றப்படாவிட்டால் நீதிமன்ற நடவடிக்கை !

0
474

posterகொழும்பு நகரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சட்டவிரோத பதாதைகள், சுவரொட்டிகள் என்பன எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் அகற்றப்படாவிட்டால் கொழும்பு நகர முதல்வர் மற்றும் மாநகர ஆணையாளருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்தச் சங்கத்தின் தலைவர் உபுல் ஜயசூரிய இதனைத் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு நகர முதல்வர் மற்றும் நகர ஆணையாளருக்கு எதிராக நாங்கள் சட்ட நடவடிக்கை எடுக்கப் பின்வாங்கமாட்டோம் எனத் தெரிவித்து வந்துள்ளோம்.

இந்த நிலையில், எதிர்வரும் திங்கட்கிழமை வரை  இதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் காலப்பகுதியினுள் சட்டவிரோத பதாதைகள் அகற்றப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் உபுல் ஜயசூரிய தெரவித்துள்ளார். கொழும்பு நகரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள  பதாதைகள், சுவரொட்டிகள் தொடர்பாக ஆளும்கட்சிமீதே ஏராளமான முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா, வேட்பு மனு கோரப்படாத காலப்பகுதியினுள் பதாதைகள் மற்றும்  சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்படுகின்றமையை தேர்தல் சட்டத்தை மீறும் செயலாகக் கருதமுடியாது எனத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here