பிரான்சில் தொடரும் போராட்டங்களால் வர்த்தகர்கள் பெரும் அச்சத்தில்!

0
1020

பிரான்சில் மஞ்சள் அங்கிப் போராட்டம் ஒரு வருடங்களைத் தாண்டி நடைபெறும் இந்த வேளையில் புதிதாக ஓய்வூதியப் பிரச்சினை ஆரம்பிக்கப் பட்டுள்ளமை தொடர்பில் பிரான்சு வர்த்தகர்கள் அச்சம் வெளியிட்டுள்ளதாக பிரெஞ்சு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தற்போது பண்டிகை விற்பனை நாட்களில் இவ்வாறான போராட்டங்களினால் பண்டிகை சோபையிழந்து வர்த்தக நிலையங்களில் விற்பனை மந்தகதியில் இடம்பெறுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

போராட்டக் காரர்கள் வர்த்தக நிலையங்களையும் இலக்குவைத்து சேதங்களை விளைவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பணிப்புறக்கணிப்பு இன்று சனிக்கிழமையும் தொடர்ந்து இடம்பெற்று வரும் அதேவேளை, வரும் செவ்வாய்க்கிழமை வரை இடம்பெறவுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். பணிப்புறக்கணிப்பு ஒருபுறம்,கடும் குளிர்,காற்று,மழை என்பவற்றையும் மறுபுறம் எதிர்கொள்ளவேண்டிய நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.

இப்போராட்டங்களில் பல ஆர்ப்பாட்டக்காரர்கள் , காவல்துறையினர், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் படுகாயமடைந்து மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

-எரிமலைக்காக கந்தரதன். படங்கள்:ஜூட்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here