கஞ்சிகுடிச்சாறு துயிலும் இல்லத்தில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வு!

0
294

அம்பாறை, கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின நினைவேந்தல் இடம்பெற்றது.

இன்று மாலை 6 மணி 5 நிமிடத்தில் ஏரம்பு செல்லம்மா என்ற நான்கு மாவீரர்களின் தாயார் பிரதான ஈகைச் சுடரினை ஏற்றி வைத்தார். இதையடுத்து ஏனையவர்களும் சுடரினை ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இராணுவத் தரப்பினர் மற்றும் பொலிஸார் உறவினர் கொண்டு வந்த மாவீர்களின் உருவப்படங்களை துயிலும் இல்லத்திற்குள் எடுத்துவர அனுமதிக்கப்படவில்லை. அத்தோடு கீதங்களும் இசைக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நினைவுகூரல் இடம்பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here