முறிகண்டியில் வாள்வெட்டுக்கு இலக்கான ஒருவர் நீதி கோரி உண்ணாவிரதப் போராட்டம்!

0
232

கிளிநொச்சியில், வாள்வெட்டுக்கு இலக்கான குடும்பஸ்தர் நீதி கோரி உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை முறிகண்டியில் முன்னெடுத்தார்.

கடந்த 23ம் திகதி முறிகண்டி அரை ஏக்கர் பகுதியில் வீட்டில் வைத்து குறித்த குடும்பஸ்தர் தாக்கப்பட்டதாகவும் இதனையடுத்து இந்த விடயம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், சந்தேகநபர்கள் மீது பொலிஸார் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என தெரிவித்தே இந்த போராட்டம் இன்று (02) காலை ஆரம்பிக்கப்பட்டது.

எனினும் சம்பவ இடத்திற்கு விரைந்த மாங்குளம் பொலிஸார் அவருடன் உரையாடியதைத் தொடர்ந்து போராட்டம் சிறிது நேரத்திலேயே முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

எனினும் இந்த விடயம் தொடர்பாக பொலிஸார் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் மீண்டும் போராட்டம் தொடருமென குறித்த நபர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here