எமதருமை இளைஞர்களுக்கு இரக்கத்தோடு எழுதும் கடிதம் இது!

0
349

அன்புக்குரிய தமிழ் இளைஞர்களுக்கு அன்பு வணக்கம். எம் தமிழினத்தின் அவலம் கண்டு தா ங்கொணாத் துயரத்தோடு இக் கடிதத்தை உங் களுக்கு எழுதுகிறேன். எங்கள் தமிழினத்தில் நடந்த தியாகங்கள், அர்ப்பணிப்புகள், அவலங்கள், இழப்புகள் வேறு எங்கும் நடந்திருக்குமா என்று கேட்குமளவுக்கு எங்கள் மண்ணில் எல்லாம் நடந்து முடிந்துள்ளது. ஆனால் விடிவும் முடிவும் கிடைக்காமல் போனதுதான் பெருந்துயர். தன்னைப் பெற்ற தாய் தந்தையரை; உடன் பிறந்த சகோதரர்களையெல்லாம் விட்டுவிட்டு, தமிழினம் வாழ வேண்டுமென்பதற்காக தம் உடலில் வெடிகுண்டுகளைப் பொருத்திக் கொண்டு போர்க்களம் புகுந்த தமிழ் இளைஞர்களின் தியாகத்தை நினைத்துப் பார்க்கிறேன். எங்களின் தியாகங்கள் அர்த்தம் பெறாமல் போயிற்றே என்ற வேதனை நெஞ்சை அடைத் துக் கொள்கிறது. ஒரு புறத்தில் இழப்போடு வாழுகின்ற குடும்பங்கள், இன்னொரு புறத்தில் முன்னாள் போராளிகள் என்ற பெயர் பெற்று ஏக்கத்தோடு வாழுகின்ற குடும்பங்கள். இப்படியாக இன்னமும் அழு கண்ணீர் சிந்துகின்ற தேசமாய் நம் தமிழர் தாயகம் உள்ளது. இதுதான் என்றால் இல்லை. ஒரு பெரும் தியாகத்தைச் சூறையாடி அதில் அரசியல் நடத்துகின்ற தமிழ் அரசியல் தரப்பினர் செய்கின்ற நாசங்கள், நொந்து கெட்ட எங்களின் மண்ணை ஆக்கிரமிக்கின்ற பேரினவாத அக்கிரமங்கள் சொல்லிமாளா. இவற்றையும் கடந்து எம் தமிழினம் வாழும் என்ற ஒரே நம்பிக்கை எங்கள் இளைஞர் களாகிய நீங்கள் மட்டுமே. எனினும் உங்கள் மீது தமிழினம் கொண்டுள்ள நம்பிக்கையை நீங்கள் அறிவீர்களா? என்பது எமக்குத் தெரியவில்லை. ஆனாலும் நீங்கள் படித்து கல்வியாளர்களாக, மிகப்பெரும் முயற்சியாளர்களாக, துறைசார் வல்லுநர்களாக, எங்கள் இனத்தின் பண்பாட்டைப் பாதுகாக்கின்ற காவலர் களாக, எங்கு சென்றாலும் தமிழினத்தின் பெருமையை தமிழினத்தின் புகழைப் படைத் தருளுகின்ற விஷ்வப் பிரமாக்களாக இருப்பீர்கள் என்ற ஒரே நம்பிக்கை மட்டுமே எம்முள். எனினும் அந்த நம்பிக்கையைக் கூட உடைத் தெறிவதாக உங்களிலும் ஆயுதக்கோஷ்டி கள், சண்டைக் குழுக்கள், வீணே காலத்தைக் கழிக்கும் கூட்டங்கள் என்பன இருக்கவே செய்கின்றது. இதுதான் என்றால் இல்லை. தென்னிந்தியத் திரைப்படங்களின் வெளியீட்டுக்காக வாழை கட்டி, வாத்தியம் இசைத்து, வெடிகொளுத்தி, வீதியை மறித்து தென்னிந்தியத் திரைப்பட நடிகர்களைப் போற்றித் துதிக்கின்ற நாசமும் நம்மிடையே வந்துவிட்டது என்றபோது எல்லாமும் முடிந்து விட்டது என்று எண்ணத் தோன்றும். ஆகையால் அன்புக்குரிய இளைஞர்களே! இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கம் போல, வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் போல, இணுவில் பொதுநூலக அமைப்புப் போல இன்னும் எங்கெல்லாம் நன்மை செய்யும் நம் உயிரினும் மேலான இளைஞர்கள் இருக்கிறார்களோ! அவர்கள் போல நீங்களும் தமிழ் மக்களுக்குச் சேவை செய்ய முன் வாருங்கள். இது அன்புரிமையின் வேண்டுதல்.

(வலம்புரி: ஆசிரியதலையங்கம் 01.11.2019)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here