ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருந்த குழந்தை சுஜித் உயிரிழந்த‌தாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவிப்பு!

0
416

 திருச்சி மணப்பாறை அருகே 25-ம் தேதி மாலை 5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுஜித்தை மீட்கும் பணிகள் சுமார் 80 மணி நேரமாக நடைபெற்று வந்தது. ரிக் இயந்திரத்தின் மூலம் 100 அடி வரை குழி தோண்டும் முயற்சிகள் தொடர்ந்தன. ஒரு ஆள் இறங்குமளவுக்கு ஒரு மீட்டர் அகலத்தில் இந்த குழி தோண்டப்பட்டு வந்தது.

ஆழ்துளை கிணறு அருகே தோண்டப்பட்ட பள்ளத்தில் தீயணைப்பு படை வீரர் ஏணி மூலம் இறங்கி பாறையின் தன்மை குறித்து ஆய்வு செய்தார். குழந்தை மீட்புப்பணி நடக்கும் இடத்தில் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். மீட்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். இந்நிலையில், ஆழ்துளை கிணற்றில் இருந்து இரவு 10.30 மணியளவிலிருந்து குழந்தையின் உடலில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் அவரது கை சிதைந்துள்ளதாகவும் அவர் கூறினார். இந்நிலையில், ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருந்த குழந்தை உயிரிழந்த‌தாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

குழந்தை சுஜித் உயிர் பிழைக்க தமிழகமே பிரார்த்தனை செய்த நிலையில், சுஜித் உயிரிழந்தது தமிழகத்தையே சோக கடலில் மூழ்கச் செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here