ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலையின் 19 ஆண்டுகள் நிறைவு இன்று!

0
1037

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டு 19 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

2000ஆம் ஆண்டு, ஒக்ரோபர் 19ஆம் நாள் இரவு 10 மணியளவில் யாழ்ப்பாண நகரின் உயர் பாதுகாப்பு வலயப் பகுதியாக அப்போது இருந்த, கச்சேரியடிப் பகுதியில் உள்ள வீட்டில் வைத்து அவர் படுகொலை செய்யப்பட்டார்.

அன்று மாலையில், நாகர்கோவிலில் சிறிலங்கா விமானப்படை உலங்குவானூர்தி விடுதலைப் புலிகளால் சுட்டுவீழ்த்தப்பட்ட செய்தியை பிபிசி தமிழோசைக்கு தொலைபேசி மூலம் வழங்கி விட்டு, வீரகேசரி நாளிதழுக்காக தொலைநகலில் அனுப்புவதற்காக அந்தச் செய்தியை எழுதிக் கொண்டிருந்த போதே, அவரது வீட்டுக்குள் நுழைந்த ஆயுததாரிகள் அவரைச் சுட்டுப்படுகொலை செய்தனர்.

அதையடுத்து, அவரது வீட்டுக்குள் கைக்குண்டை வீசிவிட்டுச் சென்றதில், நிமலராஜனின் தந்தை, தாய், மருமகன் உள்ளிட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்தப் படுகொலைக்கு ஈபிடிபியே காரணம் என்றும் குற்றம்சாட்டப்பட்ட போதிலும், சிறிலங்கா அரசாங்கத்தில் அப்போது இடம்பெற்றிருந்த ஈபிடிபியினருக்கு எதிராக முறையான விசாரணைகள் ஏதும் நடத்தப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here