பிரெஞ்சுப் பாராளுமன்றம் முன்பாக இன்று நடைபயண ஆரம்பமும் கவனயீர்ப்பும்!

0
539

அனைத்துத் தேசிய விடுதலைச் செயற்பாட்டாளர்களுக்கும்! தமிழின விடுதலை உணர்வாளர்கள்களும் விடுக்கும் அன்பான வேண்டுகோள்! 23.08.2019.
ஓர் இனத்தின் தொடர் வலிகளை சர்வதேசத்திற்கு எடுத்தியம்பி அதற்கு நீதிகேட்டு கடந்த 19 வருடங்களாக போராட்டம் நடாத்திவரும் புலம்வாழ் தமிழீழ மக்களின் போராட்டத்தின் தொடர்ச்சியாக தியாக தீபம் திலீபனின் 32 ஆவது நீங்காத நினைவுநாட்களில் ஈருருளிமூலமும், கால்நடையாகவும் போராட்டங்கள் நடைபெறவுள்ளன
பாரிசிலிருந்து இன்று 28.08.2019 புதன்கிழமை 11.00 மணிக்கு பிரெஞ்சுப்பாராளுமன்றம் முன்பாக நிழற்படக்கண்காட்சியும், தொடர்ந்து 14.00 மணிக்கு நடைபயணப்போராட்டமும் ஆரம்பிக்கப்படவுள்ளது. 28.08.2019 – 15.09.2019 ஜெனீவா மனிதவுரிமைகள் சதுக்கம் ( முருகதாசன் திடலில் ) நிறைவடையவுள்ளது. அதன் ஆரம்ப நிகழ்விலும் தொடர்ந்து தமிழ்மக்கள் வாழும் பிரதேசங்களால் இந்த நடைபயணம் இடம் பெறும் போதும் அப்பிரதேச மக்களும் கலந்து இச்சனநாயகப் போராட்டத்திற்கு வலிமை சேர்க்க வேண்டும் எனக்கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நல்வாழ்வுக்காவும், நம் அடுத்த தலைமுறையினர் சுதந்திரமாகவும், நிம்மதியாகவும் எங்கும் வாழவேண்டும் என்பதையுமே நெஞ்செல்லாம் சுமந்து மண்ணில் விதையான ஆயிரமாயிரம் உயிர்களை எப்பொழுதும் மனதில் நிறுத்துவோம்.
இந்த செய்தியை அனைவருக்கும் பகிரவும், பங்கு கொள்ளவும், பங்களிக்க வைக்கவும்
நன்றி
தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு- 06 62 84 6606
தமிழீழ மக்கள் பேரவை- 06 52 72 5867
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு 0143150421

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here